உயரும் உர விலை; கவலையில் விவசாயிகள்

By டி.செல்வகுமார்

கடந்த 2 ஆண்டுகளில் உரங்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. உரம் உள்ளிட்ட இடுபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டதாலும், அந்த அளவுக்கு நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படாததாலும் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

உரம் விலை 3 மடங்கு உயர்வு

நெல், கரும்பு போன்ற பயிர்க ளுக்கு உரம் மிகவும் அவசியம். நெல் நடவுக்கு முன்பு அடியுரமும் (பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட்), நட்டு, களை எடுத்த பிறகு மேல் உரமாக யூரியாவும் போடுகிறார்கள். சிலர் மேல் உரத்துக்கு பொட்டாஷை யும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். உரங்களின் விலை கடந்த 2 ஆண்டு களில் 3 மடங்கு உயர்ந்திருப்பது வேதனையிலும் வேதனை.

கடந்த 2010-11-ம் ஆண்டில் யூரியா 50 கிலோ மூட்டை ரூ.220-க்கு விற்றது. இந்த ஆண்டு ரூ.278-க்கு விற்பனையாகிறது. சில இடங்களில் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி அதிகம் என கூறிரூ.290 வரை கூட விற்கின்றனர்.

மத்திய அரசு நிறுவனத்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டாஷ் உரம், ஒரு மூட்டை 2010-11-ம் ஆண்டில் ரூ.270-க்கு விற்றது. இப்போது ரூ.832 முதல் ரூ.840 வரை விற்பனையாகிறது.

சூப்பர் பாஸ்பேட் உரம் 2010-11-ம் ஆண்டு ரூ.120-க்கு விற்றது. இப்போது ரூ.362 முதல் ரூ.370 வரை விற்கின்றனர்.

முற்பகுதியில் விலை அதிகம்

டி.ஏ.பி. (டை அமோனியம் பாஸ்பேட்) உரம் 2010-11-ம் ஆண்டு ரூ.450-க்கு விற்றது. இப்போது ரூ.1,175-க்கு விற்பனையாகிறது. இந்த உரம் இவ்வாண்டின் முற்பகுதி யில் ரூ.1,175-க்கும், பிற்பகுதியில் ரூ.1,100-க்கும் விற்றது. 17-17-17 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.2010-11-ம் ஆண்டு ஒரு மூட்டை ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போதைய விலை ரூ.900.

குறைந்துவிட்ட உர உபயோகம்

விளை பொருள்களுக்கு நியாய மான விலை கிடைக்காததால், விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி வருகின்றன. இதனால், சாகுபடி பரப்பளவு குறைந்து, உர உபயோக மும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் பலரும் சாகுபடி செய்யாமல் தங்களது நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டனர். அவ்வாறு தரிசாகப் போட்டதால், கொழிஞ்சி விதைப்பு மூலம் இயற்கை உரம் தானாகக் கிடைத்துவிட்டது. அதன் காரணமாகவும் இந்தாண்டு உரத்தேவை குறைந்துவிட்டது.

உரத்தின் தேவை குறைந்தாலும், அதன் விலை மட்டும் உயர்ந்து கொண்டேபோகிறது. விலை குறைவாக இருக்கிறது என்பதற் காக யூரியாவை அதிகம் பயன் படுத்தினால் பல தரப்பட்ட பூச்சிகள் தாக்கி, விளைச்சல் பாதிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மற்ற இடுபொருட்களின் விலையும் உயர்வு

உரங்கள் மட்டுமல்லாமல், பூச்சிமருந்து, களைக்கொல்லி, பூஞ்சாண மருந்து ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ள அளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெல் கொள்முதல் விலை

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் (100 கிலோ) மோட்டா ரக நெல் ரூ.1,300-க்கும், சன்னரக நெல் ரூ.1,350-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மோட்டா ரக நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு ரூ.1,310-ம், மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.50-ம் ஆக மொத்தம் ரூ.1,360 வழங்கப்படுகிறது. சன்னரக நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு ரூ.1345-ம், மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.70-ம் ஆக மொத்தம் ரூ.1,415-ம் தரப்படுகிறது.

விவசாயத்தைவிட்டே வெளியேறும் அவலம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செய லாளர் செ.நல்லசாமி கூறுகையில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

ஆனால், இடுபொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப நெல் கொள்முதல் விலை உயர்த்தப் படுவதில்லை. அதனால்தான் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி, விவசாயத்தைவிட்டே வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

டி.ஏ.பி. (டை அமோனியம் பாஸ்பேட்) உரம் 2010-11ம் ஆண்டு ரூ.450-க்கு விற்றது. இப்போது ரூ.1,175க்கு விற்பனை யாகிறது. இந்த உரம் இவ்வாண்டின் முற்பகுதியில் ரூ.1,175க்கும், பிற்பகுதியில் ரூ.1,100-க்கும் விற்றது. 17-17-17 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.2010-11-ம் ஆண்டு ஒரு மூட்டை ரூ.400க்கு விற்கப்பட்டது. இப்போதைய விலை ரூ.900.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்