சென்னை காவல்துறை அதிகாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும், இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.
அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன. 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால், இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.
பெற்றோருக்கு வேலைவாய்ப்பு
இப்படிப்பட்ட நிலையில், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்பு இருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.
இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது. இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது. எனவே, அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன். கல்வி மூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம்.
30 மாணவருக்கு ஒரு போலீஸ்
அதில், அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.
மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம். அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம். நோட்டு, புத்தகம், பேக், எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம். மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த, அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.
தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago