கடந்த 3 நூற்றாண்டாக வற்றாத பழநி அய்யம்புள்ளி கண்மாய் முதன்முறையாக வறண்டது. கண்மாயை நம்பி இருபோக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒருபோகத்துக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அய்யம்புள்ளி கண்மாய் உள்ளது. கொடைக்கானல் மலை யடிவாரத்தில் பாலாறு பொருந் தலாறு அணை, வரதமாநதி அணை களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யம்புள்ளி கிராமத்தில் உள்ளது இந்த கண்மாய். கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையே அணைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளதுபோல் இந்த கண்மாய்க்கு நீர்ஆதாரமாக உள்ளது. மலைப்பகுதியில் சிறி தளவு மழைபெய்தாலும் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும்.
கடந்த 300 ஆண்டுகளாக இந்த கண்மாய் வற்றியதில்லை என்று கூறுகின்றனர் இப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவரும் தலைமுறையினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள அணைகள் வறண்டுவருகின்றன. இந்நிலையில் அய்யம்புள்ளி கண்மாயும் வறண்டுவிட்டது. இந்த கண்மாயை நம்பி 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக சாகுபடியாக அதிகபரப்பில் நெல் பயிரிடப்பட்டுவந்தது. வழக்கம்போல் இந்த ஆண்டு நெல் விளைவிக்க நாற்றாங்கால் தயார் செய்தனர் விவசாயிகள். சிலர் முன்னதாகவே நாற்றாங்காலிட்டு நாற்றுகள் எடுத்து வயல்களில் நடவுசெய்திருந்தனர். அவர்களா லும் பயிர்களைக் காப்பாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அய்யம்புள்ளி கண்மாய் வறண்ட தால், வயல்களில் நடவுசெய்த நெற்பயிர்களும் கருகத் தொடங்கி விட்டன.
அய்யம்புள்ளி கண்மாய் பாசன விவசாயி நாகரத்தினம் கூறியதாவது: வற்றாத கண்மாய் அய்யம்புள்ளி கண்மாய் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லிவந்தனர். அந்தளவு பாரம் பரியமாக கண்மாயே வற்றி விட்டது. 2000 ஏக்கர் விளைச்சல் செய்யவேண்டிய பகுதியில் 110 ஏக்கர் மட்டுமே விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
பருவமழை பெய்து கண் மாய்க்கு நீர்வரத்து ஏற்படும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு மழை பொய்ததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
முதல்போக சாகுபடியாக நெல்லும், இரண்டாம் போக சாகுபடியாக இறவை பாசனத்தில் மக்காச்சோளமும் பயிரிடுவோம். கண்மாயில் தண்ணீர் இல்லா ததால் நிலத்தடி நீருக்கு குறைந்து கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.
தற்போது ஒருபோக சாகுபடிக்கே வழியில்லாத நிலையில் உள்ளோம். கருகிய பயிர்களால் விவசாயிகள் நிதி இழப்புக்கும் ஆளாகியுள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago