பிரான்ஸ் தாக்குதல் எதிரொலி: புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் போலீஸ் பாதுகாப்பு

By செ.ஞானபிரகாஷ்

பிரான்ஸ் நாட்டின் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரைக்கம்பத்தில் பிரெஞ்சு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அலுவலகத்தின் பின்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு தூதரக நவீன கார் தீ விபத்தில் சேதமடைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் விடுதலை நாள் நேற்று இரவு புதுச்சேரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் பிரெஞ்சு தூதரக அலுவலகம் பின்புறம் நிறுத்தப்பட்டு இருந்த, அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு கார் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து தூதரக அதிகாரிகள் எரிந்த காரை பார்வையிட்டனர். பிரான்ஸ் நாட்டின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், புதுச்சேரியில் பிரெஞ்சு அலுவலகத்திற்கு சொந்தமான கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதற்கு நாசவேலை காரணமா என்று விசாரிக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டதற்கு, "தூதரக தரப்பிலிருந்து மதியம் வரை புகார் தரப்படவில்லை. முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு சென்று பெரியகடை போலீஸார் காரை பார்வையிட்டனர்" என்றனர்.

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

பிரான்ஸ் நாட்டில் நேற்று இரவு நடந்த தீவிரவாத தாக்குதலில் 80 பேர் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் தூதரக அலுவலக கட்டிட மேல்பகுதியில் பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி இன்று, பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வந்தார். அவரை துணை தூதரக அதிகாரி காம்பியமா, அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது தீவிரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு நாராயணசாமி இரங்கல் தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, "இந்தியா-பிரான்ஸ் நல்ல நட்புறவு நாடு. தீவிரவாத செயல்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து புதுச்சேரியில் பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தாக்குதலில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்