வியாபாரிகள் போர்வையில் பணத்தை கொண்டு செல்லும் அரசியல் கட்சியினர்: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

By செய்திப்பிரிவு

தேர்தல் அதிகாரிகளின் சோதனை யால்உண்மையான வியாபாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. அரசியல் கட்சியினர் வியாபாரிகள் போர்வையில் பணத்தை கொண்டு செல்கின்றனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் நிருபர்களிடம் பிரவீன்குமார் சனிக்கிழமை கூறியதாவது:

தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6.85 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.47 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனையால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

உண்மையிலேயே வியாபார நோக்கில் பணம் எடுத்துச் செல்லும் யாரும் சோதனையால் பாதிக்கப்படவில்லை. உண்மை யான வியாபாரிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளையும் (ஆட்சியர்கள்) அறிவுறுத்தி உள்ளோம். தேர்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை யால் உண்மையான வியாபாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. அரசியல் கட்சியினர், வியாபாரிகள் என்ற போர்வையில் பணத்தை நகர்த்துகின்றனர்.

கேட்பாரற்ற ரூ.36 கோடி

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ரூ.36 கோடி ரொக்கம் சிக்கியது. அந்தத் தொகைக்கு இதுவரை யாரும் உரிமை கோரி வரவில்லை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். நேர்மை யான பணமாக இருந்தால் அதை வாங்குவதற்கு யாரும் முயற்சி செய்யாமல் இருப்பார்களா?

அரசின் சிறிய பஸ்களில் உள்ள இலை உருவத்தை மறைக்குமாறு போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர் பான வழக்கு திங்கள்கிழமை (நாளை) விசாரணைக்கு வருவதால் அதுவரை அவகாசம் கேட்டுள்

ளனர். அரசு செலவில், அரசு சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்க முடியாது. மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை.

துணை ராணுவம் வருகை

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 32 துணைநிலை ராணுவப்படை பட்டாலியன்கள் வரும் 20-ம் தேதி தமிழகம் வரு கின்றன. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூடுதல் படைகள் வரவழைக்கப்படும்.

வாக்காளர்கள் தெரிந்துதான் பணம் வாங்குகின்றனர். அவர்களிடம் மனமாற்றம் வரவேண்டும். யாராவது பணம் கொடுக்க முன்வந்தால் அதை வாங்கக் கூடாது. அத்துடன் அதுகுறித்து தேர்தல் ஆணை யத்துக்கு புகார் தெரிவிக்க முன்வர வேண்டும். ஆயிரம், இரண்டாயிரம் பணம், பிரியாணி, மதுபானம் எல்லாம் எத்தனை நாளைக்கு வரும்? எனவே, இவற்றுக்காக ஓட்டு போடக் கூடாது. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

விஜயகாந்த் மீது நடவடிக்கை?

"பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பிரவீன் குமார், "அவரது தேர்தல் பிரச்சார பேச்சு விவரங்களை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்