நாகர்கோவில் அருகே பறக்கையில் திறப்பு படைப்பாளிகள் தங்கி எழுத இலவச இல்லம்: இலக்கியத்தை வளர்க்க புதிய முயற்சி

By என்.சுவாமிநாதன்

போதிய திறமை இருந்தும் எழுத்தாற்றலை வெளிப்படுத்த தோதுவான மனச்சூழல், இடச்சூழலின்றி திண்டாடும் படைப்பாளிகளுக்கு கைகொடுக்கும் விதமாக 'நிழற்தாங்கல் படைப்புக்கான வெளி' என்னும் பெயரில் இலவச தங்கும் இல்லம் நேற்று நாகர்கோவில் அருகே பறக்கையில் திறக்கப்பட்டது.

எழுத்தாளர்களின் கூடுகைக்கு வசதியாக இந்த இல்லம் அமைக்கப் பட்டுள்ளது. வீட்டிலி ருந்து எழுத இட வசதி, மனச் சூழல் இல்லாத வர்கள், நாடோடிகளாக சுற்றி வந்து எழுதுபவர்கள், குமரி மாவட் டத்துக்கு வந்து இங்குள்ள வரலாறு களை ஆய்வு செய்து எழுதும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இலவசமாக, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குவதற்கான வசதி இந்த இல்லத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நூல் வெளியீடு

எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாத மாக அமைக்கப்பட் டுள்ள இந்த இல்லத்தை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி தர்மராஜன் நேற்று திறந்து வைத்தார். பாலபிரஜா திபதி அடிகளார், எழுத்தாளர் ஜெய மோகன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

விக்கிரமாதித்யனின் ‘’சாயல் எனப்படுவது யாதெனின்” என்னும் கவிதை நூலை ஜெயமோகன் வெளி யிட, எழுத்தாளர் சரவணன் சந்திரன் பெற்றுக் கொண்டார். ரோஸ் ஆன்றோ எழுதிய ‘‘ஈனில் 11 கவிஞர்களின் தொகை’’ நூலை கோணங்கி வெளியிட, குளச்சல் யூசுப் பெற்றுக் கொண்டார். லிபி ஆரண்யா, பாலா கருப்பசாமி ஆகியோர் நூல்களை விமர்சனம் செய்து பேசினர்.

முதல் முயற்சி

எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ‘‘உலகின் பல்வேறு நாடு களில் இது போல், படைப்பாளி களுக்கான கூடு உள்ளது. இங்கிலாந்து மற்றும் மைசூரில் கூட இது போன்ற மையம் உள்ளது. திரு வனந்தபுரத்தில் காபி கிளப்பில் பல முன்னணி படைப்பாளர்களை யும் பார்க்க முடியும். ஆனால், தமிழ கத்தில் இலக்கியவாதிகளுக்கு இது போன்ற மையம் இதுவரை இல்லை. தமிழ் இலக்கிய மரபின் முதல் முயற்சி இது” என்றார் அவர்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசும்போது, ‘‘காட்டுக்குள் ஒரு மரம் மட்டும் இருப்பதில்லை. ஈட்டி, தேக்கு, மருது என பல பெரிய மற்றும் சிறிய மரங்களும் உள்ளன. அதே போலத் தான் இலக்கியம். இங்கு அனைத்து வகை எழுத்துக்கும் இடம் உண்டு. இந்த அரிய முயற்சிக்கு துணை நிற்கிறேன்” என்றார் அவர்.

பாலபிரஜாதிபதி அடிகள் பேசும் போது, ‘‘அதிகமான புத்தகங்களை படிப்பவரே படைப்பாளி ஆக முடியும். தமிழ் உணர்வை புறக்கணிக்கும் காலத்தில் நாம் உள்ளோம். இந்த சமூகத்தை இப்போது மாற்றா விட்டால் எப்போதும் மாற்ற இயலாது” என்றார் அவர்.

வாசிப்பை நேசிக்கிறேன்

எஸ்.பி. தர்மராஜன் பேசும் போது, ‘‘ஐவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்த போது அங்கு நடக்கும் இலக்கிய வாசகர் வட்ட கூட்டங்களில் பங்கேற்பேன். பணிச்சூழலால் வாசிப்புக்கான நேர அளவு குறைந்து போனது. இப்போது, இளைப்பாறும் நேரம் தொலைக்காட்சி பெட்டியை நோக்கி திரும்பியுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் எனக்கு பல்கலை மாணவ பருவ இலக்கிய அமர்வுகள் நினை வுக்கு வருகிறது. இப்போது மீண்டும் வாசிப்பை நேசிக்க துவங்கியுள்ளேன். மூன்று மணி நேரம் படிப்பதற்கு ஒதுக்கியுள்ளேன்” என்றார் அவர்.

சரணாலயம்

இலவச தங்குமிடத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் லெட்சுமி மணிவண்ணன் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ஓவியக் கலை ஞர்களுக்காகவே சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ் என்னும் பெயரில் ஒரு இடம் சென்னை யில் உள்ளது. இங்கு ஓவியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானா லும் இலவசமாக தங்கி ஓவியம் வரையலாம். இதே போல் கேரள மாநிலத்தில் மறைந்த திரைப்பட இயக்குநர் ஜான் ஆப்ரகாம் அனைத்து வகை கலைஞர் களுக்காகவும் இதே போல் 'ஒடேஷா' என்னும் பெயரில் இட வசதி அமைத்துக் கொடுத்துள்ளார்.

இங்கும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இலவசமாக தங்கலாம். கேரளாவில் கள ஆய்வு செய்து எழுதுவோருக்கான சரணாலயமாக இந்த இடம் உள்ளது.

இதே போல் குமரி மாவட்டத்துக் கும் ஏராளமான எழுத்தாளர்கள் வருகின்றனர். அவர்களது வசதிக் காக இங்கும் ஒரு இடம் தேவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த நிழற்தாங்கல். எழுத்தாளர் களுக்காக கவிஞர் கண்ணதாசன் தனது வீட்டின் மேல் தளத்தையே இது போல் மாற்றியிருந்தார். நாங்கள் அவரின் வழித்தோன்றல்கள் என்பதால் அவர் செய்த பணியை இப்போது முன்னெடுக்கிறோம்'' என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்