4 தொகுதிகளில் போட்டியிட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஜெ. வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்பு

By ஆர்.ஷபிமுன்னா

கடந்த 2001 சட்டசபை தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம். திமுக எம்பி விஜயனின் மேல் முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா மற்றும் மத்திய தேர்தல் ஆணையர் உட்பட ஏழு பேருக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற அமர்வின் நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி மதன் பி.லோகுர் முன்னிலையில் வந்தபோது, விஜயனின் வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா ஆஜரானார். அப்போது அவர், மனுதாரர் இறந்தமைக்காக வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்தது தவறு எனவும், மேல்முறையீடு செய்துள்ள விஜயன், இதுபற்றி ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையத்திற்கு மனுதாரருடன் இணைந்து புகார் அளித்தவர் எனவும் தெரிவித்தார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா, மத்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட நான்கு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கடந்த 2001-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட மனு செய்தார். இதற்கு முன்பாக அவர் மீது நடந்த ஊழல் வழக்கில் உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி இரண்டு வருடத்திற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் ஒரு தொகுதியில் கூட போட்டியிட முடியாத நிலையில், ஜெயலலிதாவின் நான்கு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது சர்ச்சையானது.

இதை எதிர்த்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செ.குப்புசாமி, மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். பிறகு இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

சுமார் பத்து வருடங்களாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது, இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளது அறிக்கையின் பேரில் உயர் நீதிமன்றம் அதை மீண்டும் விசாரித்து நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என 2012-ல் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மனுதாரரான செ.குப்புசாமி இறந்துவிட, அந்தக் காரணத்தை வைத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தற்போது விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்