முதலில் எங்கள் மீனவர்களை விடுவியுங்கள் பிறகு இந்திய மீனவர்களை நாங்கள் விடுவிக்கிறோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை சிறையில் இருக்கும் 275 மீனவர்களும் திங்கள்கிழமை (இன்று) முதல் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து பொங்கல் பண்டிகைக்கு பிரிந்த உறவுகள் வீடு திரும்பும் என மீனவச் சமூகம் காத்திருந்த நிலையில், இந்தியச் சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவித்த பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது.
மீனவர்கள் விடுதலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில்: "வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இலங்கை மீனவர்கள் தமிழகச் சிறைகளில் 179 பேரும், ஆந்திரச் சிறையில் 34 பேரும் அடைபட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கும் பட்சத்தில் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப் படுவார்கள்" என்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் ஜன.13 முதல் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு: "எங்கள் மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே விடுவிக்குமாறு நாங்கள் கோரியிருதோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago