சேலம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.5 கோடிக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை, அரசு ரயில்வே போலீஸார், ரயில்வே நிர்வாகத்தினர் ஆகியோர் ரயிலில் பயணிகளுக்கும், பொருட்களுக்கும் அளிக்க வேண்டிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்து தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசித்து வருகின்றனர்.
ரயிலில் இரவுநேரத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இரவு 11 மணிக்கு மேல் ஏசி பெட்டிகளுக்கு இடையே உள்ள கதவுகளை மூடிவைப்பது வழக்கம். இதேபோல இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் மூடி வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவில் ரயிலில் கொள்ளையடிப்பவர்கள் நடுக் காட்டில் செயினை இழுத்து ரயிலை நிறுத்தி தப்பிச் செல்கின்றனர். இதுபோன்ற நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சும் சோடியம் விளக்குகள் வைத்திருப்பதுடன், தேவைப்பட்டால் குற்ற வாளியை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க ரயில்வே பாதுகாப் புப் படை போலீஸாருக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்கவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரயில் நிலையங்கள், நீண்டதூரம் செல்லும் ரயில்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
கார்டு பெட்டியில்
கார்டு பெட்டியின் ஒருபகுதி லக்கேஜுக்காக ஒதுக்கப் பட்டிருப்பதால் அதில் விலைமதிப்புமிக்க பொருட்களை வைத்து அனுப்புவதே சிறந்த பாதுகாப்பாக இருக்கும். அதில் போதிய இடமில்லாவிட்டால் நான்கு அல்லது ஐந்து ரயில்களில் கார்டு பெட்டியின் லக்கேஜ் பகுதியில் வைத்து அனுப்புவதுதான் முழு பாதுகாப்பாக இருக்கும் என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago