மதத்தை குறிப்பிடாமல் கலப்புத் திருமணங்களைப் பதிவு செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதம், ஜாதி கலப்புத் திருமணங்களைப் பதிவு செய்வதற்கு, விரும்பாவிட்டால் மதத்தை குறிப்பிட வேண்டியதில்லை என அரசாணை பிறப்பிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமண நலச்சங்க செயலர் பொற்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:

மதம், ஜாதியை கடந்து காதலித்து கலப்புத் திருமணம் செய்ய முன்வருவோருக்கு தேவையான உதவிகளை எங்கள் சார்பில் செய்து வருகிறோம். கலப்புத் திருமணம் செய்பவர்கள் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்யச் செல்லும் போது பதிவுச் சான்றிதழில் தங்களின் மதத்தை குறிப்பிடுமாறு சார் பதிவாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். கலப்பு திருமணம் செய்வோர் ஜாதி, மதங்களை கடந்து காதலித்து திருமணம் செய்கின்றனர். அவர்களிடம் மதத்தை தெரிவிக்கக் கேட்பது சட்ட விரோதம்.

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது விரும்பாவிட்டால் ஜாதி, மதத்தை குறிப்பிட வேண்டியதில்லை என 1973ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஜாதி, மதத்தை தெரிவிக்காத குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இந்த அரசாணையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகள் ஜாதி, மதம் இல்லா மனிதர்களாக வளர வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

இப்போதுள்ள இளைய தலைமுறையினரும் ஜாதி, மதம் அற்றவர்களாகவே வாழ விரும்புகின்றனர். கல்விச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகை பெறாமல் வாழ வேண்டும் என இளைஞர்கள் நினைக்கின்றனர்.

இவ்வாறு பெற்றோரால் அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் சான்றிதழ்களில் ஜாதி, மதத்தை குறிப்பிடாமல் வாழ விரும்புபவர்கள் திருமணத்தின் போது தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி மதத்தைக் கட்டாயம் குறிப்பிட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஜாதி, மத கலப்புத் திருமணம் செய்வோரின் திருமணங்களைப் பதிவு செய்யும் போது மதத்தை கேட்கக்கூடாது என்று பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது விரும்பாவிட்டால் ஜாதி, மதத்தை குறிப்பிட வேண்டியதில்லை என்ற அரசாணை போல், மதம், ஜாதி கலப்புத் திருமணம் செய்வோரின் திருமணத்தை பதிவு செய்வதற்கு விரும்பாவிட்டால் மதத்தை தெரிவிக்க வேண்டியதில்லை என அரசாணை பிறப்பிக்கவும், கலப்புத் திருமணப் பதிவுக்கு மதம் குறித்து கேட்காமல் திருமணத்தை பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செலவம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்