சென்னையில் கூடுதலாக 163 மாநகர பஸ்களை இயக்க முடிவு: நெரிசலைக் குறைக்க, வருவாயை பெருக்க அதிரடி திட்டம்

By கி.ஜெயப்பிரகாஷ்

காலை, மாலை நேரங்களில் நெரி சலைக் குறைக்கவும், வருமானத் தைப் பெருக்கவும் தேர்வு செய்யப் பட்ட முக்கியமான 75 வழித்தடங் களில் கூடுதலாக 163 பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து செல்கிறது. இதனால், மக்களுக்கான போக்கு வரத்து தேவையும் அதிகரித்து வருகிறது.

சீரான போக்குவரத்து வசதி கிடைக்க ஆண்டுதோறும் புதிய புதிய வழித்தடங்களில் பஸ்கள் அறி முகம் செய்யப்பட்டு வருகின்றன.

நகரில் தற்போது 100 சிறிய பஸ்களும் முக்கியமான மையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

75 வழித்தடங்களில் 163 பஸ்கள்

ஆனாலும், பஸ்களில் நெரிசலை குறைக்க முடியவில்லை. குறிப் பாக காலை மற்றும் மாலை நேரங் களில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சில வழித்தடங்களில் குறைவான பஸ்கள் செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படி களில் தொங்கியபடி பயணம் செய் கின்றனர். இதனால் விபத்து களும் விபரீதங்களும் நடக்கின்றன.

எனவே, நெரிசலைக் குறைக் கும் வகையில் நகரில் முக்கியமான 75 வழித்தடங்களை தேர்வு செய்து 163 பஸ்களை கூடுதலாக இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

எந்தெந்த வழித்தடங்கள்?

குறிப்பாக அய்யப்பன்தாங்கல் தி.நகர், வடபழனி பட்டினப்பாக் கம், அயனாவரம் பெசன்ட் நகர், செம்மஞ்சேரி தி.நகர், பூந்த மல்லி - தி.நகர் ஆகிய வழித்தடங் களில் கூடுதலாக தலா 4 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் பிராட்வே - மணலி, பிராட்வே அய்யப்பன்தாங்கல், பெரம்பூர் அண்ணாசதுக்கம் ஆகிய வழித் தடங்களில் கூடுதலாக தலா 3 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத் துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

மாநகர பஸ்களில் காலை மற் றும் மாலை நேரங்களில்தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் காலியா கத்தான் செல்கின்றன. இதனால், மாநகர போக்குவரத்து கழகத் துக்கு இழப்பு ஏற்படுகிறது.

எனவே, கூட்ட நெரிசலை குறைக்கவும், வருவாயை பெருக்க வும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான 75 வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம்.

இவற்றில் காலை 7 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் 8 மணி வரை மொத்தம் 163 பஸ்களை இயக்க உள்ளோம். சில வழித்தடங் களில் ஏற்கெனவே பஸ்களை இயக்கப்பட்டுவிட்டன.

விரைவில் தேர்வு செய்யப் பட்டுள்ள அனைத்து வழித்தடங் களிலும் கூடுதல் பஸ்களை இயக்கு வோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதி தேவையா?

‘‘பயணிகளின் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்கெனவே இயங்கி வந்த 12 மணி நேர சேவை மையம் தற்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதற்காக புதிய ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர பஸ்கள் குறித்தும், போக்குவரத்து ஊழியர்கள் குறித்தும் 94450 30516, 93833 37639, 044-23455801 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், உங்கள் பகுதியில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்