போட்டித்தேர்வர்கள், கல்வியாளர்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு உருவாக்கிய தமிழ் கலைக்களஞ்சியம்: 9 மாதங்களில் 67,500 கட்டுரைகள் உருவாக்கம்

By க.சக்திவேல்

போட்டித்தேர்வர்கள், கல்வியாளர் களுக்குப் பயன்படும் வகையில் தமிழ் கலைக்களஞ்சியத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர் கள், தமிழக அரசோடு இணைந்து இந்தக் கலைக்களஞ்சியத்தில் தாங்கள் சார்ந்த துறைகளில் கட்டுரைகளை சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருள் குறித்த அதிக தகவல்களை அளிப்பது கலைக் களஞ்சியம் (encyclopedia) ஆகும். உலக அளவில் பிரபலமான கட்டற்ற கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா உள்ளது. அதேபோன்று தமிழக அரசு தனக்கான தனித்துவமான தமிழ் கலைக்களஞ்சியத்தை (www.tamilkalanjiyam.in) உருவாக்கியுள்ளது. இந்தக் கலைக் களஞ்சியத்தை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கி, மேம்படுத்தி வருகிறது.

கல்வியியல், கணிப்பொறி யியல், மின்னணுவியல், வேளாண்மை, மீன்வளத்துறை, சங்க இலக்கியம், நாடகவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த 9 மாதங்களில் 67,500- க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியக் கட்டுரைகளை தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஒரு லட்சம் கட்டுரைகள் என்ற இலக்கை அடைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தமிழ்பெருங் களஞ்சியத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

போட்டித் தேர்வர்கள், கல்வி யாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் அறிவுத் தேடலுக்கு பயன்படும் நோக்கில் தமிழ் கலை களஞ்சியம் உருவாக்கப்பட்டுள் ளது.

இந்த கலைக்களஞ்சியத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளி யிட்ட புத்தகங்கள், நாட்டுடைமை யாக்கப்பட்ட நூல்கள், தமிழ் வளர்ச்சித்துறை, இதர அரசு துறைகள் சேகரித்துள்ள அரிய நூல்களில் உள்ள தகவல்களை சேர்த்து வருகிறோம். கல்வியாளர் களுக்குப் பயன்படும் வகையில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்தக் கட்டுரைகளையும் இனி வரும் நாட்களில் சேர்க்க உள்ளோம். இதுதவிர, தமிழகத் தில் மொத்தமுள்ள 12,500-க் கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 10,000 ஊராட்சிகள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38,800 கோயில்களில் 18,928 கோயில்க ளின் அடிப்படைத் தகவல்கள் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற் றுள்ளன மீதமுள்ள கோயில்க ளின் தகவல்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

கட்டுரைகளை சேர்க்கலாம்

இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பெருங்களஞ்சியத் திட்டம் செயல் படுகிறது. எனவே, யார் வேண்டு மானாலும் தமிழ் கலைக்களஞ் சியத்தின் உள்ளே நுழைந்து பல தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு வரும் தான் சார்ந்தத் துறையில் இருக்கும் அறிவை பொதுவெளி யில் பகிர்ந்துகொள்ள இதன் மூலம் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவ்வாறு கட்டுரைகளைப் பதி வேற்றவும், திருத்தம் செய்யவும் சில வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு கட்டுரையில் சேர்க்கப்படும் கருத்துக்கு சான்றுகள் இணைக் கப்பட்டால்தான் அது பதிவேற்றப் படும். மேலும், ஒருவர் கட்டுரை களை திருத்தும்போது எங்களுக்கு அறிவிப்பு வரும். இதன்மூலம் சர்ச்சைக்குரிய பதிவுகள் தவிர்க்கப்படும்.

தமிழ் விசைப்பலகை இல்லாத கணினி, லேப்டாப்களிலும் தமிழில் சொற்களை தட்டச்சு செய்து தேடும் வசதி தமிழ்க்களஞ்சியம் இணையதளத்தில் செய்துகொடுக் கப்பட்டுள்ளது. செல்போனில் பார்வையிடும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பல்லூடகத்தன்மை யுடன் (Multimedia Encyclopaedia) கலைக்களஞ்சியம் இருக்கும் வகையில், விரைவில் புகைப்படங் கள், வீடியோக்களையும் சேர்க்க உள்ளோம்.

இந்த முயற்சி வருங்காலத்தில் மாணவர்களுக்கும், பொதுமக் களுக்கும் மிகப்பெரிய பயனை அளிக்கும். இந்தக் கலைக் களஞ்சியத்தை பயன்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது குறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் 7299397766 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்