அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்ட டிடிவி தினகரன்: ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட முடியுமா? - உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் கருத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ரூ. 28 கோடி அபராதம் விதிக்கப்பட்ட டிடிவி. தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக துணைப் பொதுச் செய லாளர் டிடிவி.தினகரன், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி யுள்ளார். இவர் கடந்த 1995-96 ல் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு அமலாக்கத்துறை ரூ.28 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்தாததால் டிடிவி.தினகரனை ‘நொடித்துப் போனவர்’ என அறிவித்து அமலாக் கத்துறை நோட்டீஸ் பிறப்பித் துள்ளது. இந்த நோட்டீசுக்கு டிடிவி தினகரன் தடை பெற்றுள்ளார். அதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதே காரணத்துக்காக டிடிவி.தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய அமைப்பை அணுக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதில் சட்ட ரீதியாக சிக்கல் எழுமா? என்பது குறித்து உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு8(3)-ன் படி ஒருவர் தன் மீதான குற்றத்துக்காக 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவராக இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் டிடிவி.தினகரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதம் என்பது உரிமையியல் சார்ந்தது. இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் அவர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில், தான் இந்திய பிரஜை இல்லை. சி்ங்கப்பூர் பிரஜை என வாக்குமூலம் தாக்கல் செய் திருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம். கடந்த 2004-ல் எம்பி தேர்தலில் அவர் போட்டியிட்டபோதும் இதே பிரச்சினை எழுந்தது. ஆனால் அப்போது தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது. இப்போதுள்ள சூழலில் அவரது மனுவை ஏற்பதா? வேண் டாமா? என்பது தேர்தல் ஆணை யத்தின் கையில்தான் உள்ளது.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

அமலாக்கத்துறை மேல்முறை யீட்டு ஆணையம், தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்துள் ளது. இந்த அபராதத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தினகரனை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்ததை யும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதமும், இதே குற்றத்துக்காக குற்றவியல் நீதி மன்றம் விதிக்கும் தண்டனைக்கான கட்டணமும் ஒன்றுதான். பெரிய குளம் தொகுதியில் அவர் போட்டி யிட்டபோது அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம் எனக்கூறி தப்பிவி்ட்டனர். ஆனால் தற்போது இந்த அபராதத்தை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து, வழக்கையும் எதிர்கொள்ள உத்தர வி்ட்டுள்ளது. இதனால் கண்டிப்பாக அவரது மனுவை தேர்தல் ஆணை யம் ஏற்காது என நினைக்கிறேன்.

வழக்கறிஞர் ஏபி.சூரியபிரகாசம்

அமலாக்கத்துறை விதிக்கும் அபராதம் என்பது உரிமையியல் சம்பந்தப்பட்டது. அது குற்றவியல் நடவடிக்கை சார்ந்தது அல்ல. இந்த அபராதத்தைக் காரணம் காட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)(இ)-ன் கீழ் தினகரனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக் கூறுவதற்கு இந்த சட்டப்பிரிவு பொருந்தாது. இதே காரணத்துக் காக பெரியகுளம் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல் லாது என அறிவிக்க கோரி திமுகவை சேர்ந்த கம்பம் செல்வேந் திரன் தொடர்ந்த வழக்கில், எதிர் தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட எந்த தடையுமில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவி்த் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 secs ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்