சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலைவர் பதவி காலியிடம்: புதிய குவாரிக்கு அனுமதி கிடைக்காததால் மணல் விலை கிடுகிடு உயர்வு

By டி.செல்வகுமார்

மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலைவர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. இதனால் மணல் தட்டுப்பாடு காரணமாக நாளுக்குநாள் அதன் விலை அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் நான்கு யூனிட் கொண்ட ஒரு லாரி லோடு மணல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்றது. இப்போது அதன் விலை ரூ.38 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் மேலும் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு 38 மணல் குவாரிகள் செயல்பட்டன. இப் போது 20 குவாரிகள்தான் செயல் படுகின்றன. குவாரிகளை மூடிய தால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இதனிடையே, புதிதாக 26 இடங்களில் மணல் குவாரியை திறக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

ஆனால், புதிய மணல் குவாரி களுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலைவர் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. இதன் காரணமாக மணல் தட்டுப்பாடும், மணல் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறிய தாவது:

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலைவர் கடந்தாண்டு ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார். அதன்பிறகு இப்பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இதனால் புதிய மணல் குவாரிகளுக்கு அனு மதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மணல் விலை கடுமை யாக அதிகரித்துள்ளது. இந்நிலை நீடித்தால் கட்டுமானத் தொழில் முற்றிலுமாக முடங்கிவிடும். மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலைவர் பதவியை உடனடியாக நிரப்பி, புதிய மணல் குவாரிகளுக்கு விரைந்து அனுமதி வழங்கினால்தான் மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத் தலை வர் பதவி காலியாக இருப்பதால் மணல் குவாரி மட்டுமல்லாமல் புதிய கல் குவாரி, கிராவல் மண் குவாரி, கிரானைட் குவாரி மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் புதிய அணை, புதிய கால்வாய் கட்டுதல் போன்ற பணிக்கும் இந்த அதிகாரிதான் அனுமதி அளிக்க வேண்டும். இந்த ஆணையத் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதால் புதிய பணிகள் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற் பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்