செல்போன் சேவைகளில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை, அழைப்புத் திட்டங்கள் என அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுப்புகின்றன. இவை பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. சில வாடிக்கையாளர்கள் இந்த சேவை களில் சிக்கி பணத்தை இழப்பதும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந் போது, திடீரென முகர்ஜியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள் ளது. எதிர்முனையில் பேசியவர், வீடு கட்ட கடன் தருகிறோம் என்று பேசிய பேச்சைக் கேட்டு கோபமுற்ற முகர்ஜி, 'நான் இப்போது முக்கியமான கூட்டத் தில் இருக்கிறேன்' என கூறி விட்டு, செல்போனை அப்போதைய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயண சாமியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். இப்பிரச்சினை அப் போது பூதாகரமானது.
இதையடுத்து அப்போதைய மத்திய அரசு, தொலைத்தொடர்பு உயர்நிலைக் கூட்டத்தை கூட்டி, வேண்டாத அழைப்புகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தேவையற்ற அழைப் புகளின் பதிவு (Registration of unwanted calls) என்ற புதிய திட் டத்தை அறிமுகப்படுத்தி, தேவை யற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் 1909 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். வாடிக்கையாளர் பதிவு செய்த ஒரு வாரத்துக்குப் பிறகும் விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வந்தால் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். மேலும் 1503 என்ற எண்ணுக்கு விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்கலாம். மீண்டும் இது தொடர்பாக ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். 'தொல்லை செய்ய வேண்டாம்' என்று பதிவு செய்தவர்களுக்கு மீறி விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
ஆனால் செல்போன் நிறுவனங் களின் விளம்பரம் என்ற பெயரில் திடீரென்று அழைப்பதும், எஸ்எம்எஸ் அனுப்புவதும் தொடர் கதையாகிக்கொண்டே வருகிறது. ஒரு சில எஸ்எம்எஸ்களில் தவறி பட்டனை அழுத்தினாலும் ரூ.10, 30 என பிடித்தம் செய்துவிடுகின்றனர். பெரும்பாலான வயதான பெண் களும், ஆங்கிலத்தில் வரும் விளம்பரங்களை படிக்கத் தெரி யாமல் இருப்பவர்களும் இது போன்று தவறுதலாக அழுத்தி சேவைக் கட்டணத்தை இழப்பதாகத் தெரிவிக்கிறனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் கூறும் போது, “செல்போன் நிறுவனங்கள் அவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளையும், நிபந்தனைகளையும் செயல்படுத்துகின்றனவா என்பதை ட்ராய் கண்காணிப் பதில்லை. ட்ராய் மீதான நம்பகத் தன்மை குறைந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கவோ, தகவல்களை பெற வேண்டுமானால் டெல்லிக்குத்தான் செல்ல வேண்டும். புதுடெல்லி தவிர இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் ட்ராயை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே வாடிக்கையாளர் களின் நலன் கருதி ட்ராய் அனைத்து மாநிலங்களிலும் விரிவாக்கப்பட வேண்டும். ட்ராய் அமைப்பை விரிவுபடுத்தி கண்காணிப்பைத் தொடர்ந்தால்தான் இந்த பிரச்சினை களுக்கு தீர்வு காணமுடியும்” என்கிறார்.
இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேவையற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த
'DND' (Do Not Disturb) என்ற முறையைப் பயன்படுத்திய பின்னரும் விளம்பரம் தொடர்ந்து வருவது தொடர்பாக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்கு விசாரணை முடிந்தவுடன் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும் ட்ராயின் கிளைகள் புதுடெல்லி தவிர வேறு எங்கும் அமைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை" என்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago