சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றிய ராஜேஷ்குமார் அகர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்காலிக தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி அவர் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அகர்வால், கடந்த அக்டோபர் 24-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் பதவி உயர்வு மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாயன்று பிறப்பித்தார்.
இதனையடுத்து நீதிபதி அகர்வாலுக்கு வழியனுப்பு மற்றும் பாராட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, நீதிபதி அகர்வாலின் பணிகளைப் பாராட்டி உரையாற்றுகிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்த வார இறுதிக்குள் ஆர்.கே.அகர்வால் பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago