அத்திப்படிகை, கோத்தகிரியில் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். மொத்தமே 30 குடும்பங்கள் தான் இங்கு வசிக்கின்றன.
இப்பகுதி மக்கள் சில நாட்களாக மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். காரணம், காட்டு விலங்கிடம் இருந்து தப்பி வந்த மான் குட்டி ஒன்று அவர்கள் கிராமத்துக்குள் தஞ்சம் புகுந்ததே.
முதலில் அந்த மான் குட்டியை காட்டுக்குள் மீண்டும் துரத்த கிராமவாசிகள் எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் அது அவர்களை விட்டுச் செல்வதாக இல்லை.
பின்னர் அதற்கு 'குட்டி' என பெயர் சூட்டினர். அதோடு மட்டும் நில்லாமல், போட்டி போட்டுக் கொண்டு 'குட்டி'-யை சீராட்டி வருகின்றனர்.
இது குறித்து, கோத்தகிரி வனவிலங்கு பராமரிப்புச் சங்க நிறுவனர்-உறுப்பினர் பூபதி கூறுகையில்: "அத்திப்படிகை மக்கள் வழி தவறி வந்த மான் குட்டியை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர். பொழுது சாய்ந்ததும் மான் குட்டி அருகில் இருக்கும் வனத்திற்குச் சென்றாலும், விடிந்ததும் கிராமத்தை நோக்கி வந்து விடுகிறது. அதற்கு 'குட்டி' என பெயர் சூட்டியுள்ளனர். அப்படி அழைத்தால் உடனே அது திரும்பிப் பார்க்கிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago