பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக உள்துறை செயலர் இன்று (புதன்கிழமை) பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க விதிகள் இருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையுயர்வை கருத்தில் கொண்டு பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது வசூலிக்கப்பட்டதைவிட வெறும் 10% மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இது நியாயமான உயர்வே. ஏற்கெனவே ஆம்னி பேருந்துகளை நட்டத்தில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிப்பது ஏற்புடையதல்ல. பண்டிகை காலங்களில் மட்டும் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்வது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்திருக்கிறோம். அவர்களும் எங்களது நிலையை ஏற்றுக்கொண்டுள்ளனர்" என வாதிட்டார்.
அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட சட்ட உதவியாளர் கூறும்போது, "ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் கூறுவதுபோல் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. மேலும், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை மாநில அரசே நிர்ணயிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் வழங்கிய தீர்ப்பின்படி மாநில அரசு பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்" என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "பண்டிகைக் கால கூட்ட நெரிசலை சுட்டிக்காட்டி ஆம்னி பேருந்துகள் ஒரு பைசாகூட கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியாது. ஆம்னி பேருந்துகளை நட்டத்தில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறுகிறீர்கள். அப்படியிருக்கும்போது எதற்காக அந்தத் தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பிற்பகலில் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த கருத்தால், ஆம்னி பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமாகவே முன்வந்து..
தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக பதிவாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
அப்போது நீதிமன்றத்தில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோரிடம் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர்கள், "ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பஸ்களில் அதில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது" என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?" என்றனர். அதற்கு, "கட்டணம் நிர்ணயம் தொடர்பாக இதுவரை அரசாணை எதுவும் இல்லாததால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "பிற மாநிலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்யும்போது, தமிழகத்தில் அரசு ஏன் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக உள்துறை செயலர், போக்குவரத்துத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago