செட்டிநாடு குழும நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்ட தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் விசுவாச பணியாளர்கள் தங்களை நீக்கியதற்கு முகாந்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கும் நடக்கும் பனிப் போர் வளர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு எம்.ஏ.எம்.ராமசாமி பதில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பொறுப்புகளில் இருந்து முத்தையாவும் அவரைப் பெற்ற தந்தை சேக்கப்பச் செட்டியாரும் அண்மையில் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களை உடனடியாக நியமிக்கப்பட்டனர். இதனிடையே, மதுரையில் உள்ள செட்டிநாடு பங்களாவில் இருந்த சாப்பாட்டுத் தட்டு உள்ளிட்ட வெள்ளிச் சாமான்கள் காணாமல் போனதால் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் எம்.ஏ.எம்.
இதற்கிடையே ஆளும் தரப்புடன் சுமூகமான உறவில் இருக்கும் எம்.ஏ.எம்-மின் சித்தப்பா மகன் ஏ.சி.முத்தையா சொந்தக் காரணங்களுக்காக எம்.ஏ.எம்-முடன் நெருக்கம் இல்லாமல் ஒதுங்கியிருந்தார். அவர் இப்போது அரண்மனையின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க, எம்.ஏ.எம்-முடன் கைகோத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி யுள்ளார். இருப்பினும், பெங்க ளூரில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தெளிவு பிறக்கும் வரை சட்டரீதியான நடவடிக்கைகளை ஒத்திவைக்கலாம் என ஏ.சி.முத்தையாவும் சில முன்னணி வழக்கறிஞர்களும் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.
இந்நிலையில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், செட்டிநாட்டு அரண்மனை மற்றும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் பணியில் இருந்த சுமார் 70 பேரை அதிரடியாய் நீக்கியுள்ளார் சுவீகார புதல்வர் முத்தையா. இவர்கள் அனைவருமே எம்.ஏ.எம்-மால் பணியமர்த்தப்பட்ட அவரது விசுவாசிகள். இவர்களுக்கு சில மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
நீக்கப்பட்டவர்களில் ஒரு சிலரை மட்டும் தனது சொந்தப் பணத்தில் சம்பளம் கொடுத்து பணியில் நீடிக்க வைத்துள்ளார் எம்.ஏ.எம். இந்நிலையில், நீக்கப் பட்டவர்களில் 26 பேர், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தாங்கள் நீக்கப்பட் டதற்கு காரணம் கேட்டும், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு நோட் டீஸ் அனுப்பி உள்ளார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago