மண்டபம் முகாம் அகதிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சகாயமாதா ஆலயத் திருவிழா கடந்த மே 6 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் போது முகாமில் உள்ள அகதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மண்டபம் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் தங்களது குடும்பத்தினருடன் வழக்கறிஞர்கள் திருமுருகன்,டேவிட் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஓம்.பிரகாஷ் மீனாவை சந்தித்து திங்கட்கிழமை புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மனுவில், ஆலயத் திருவிழா அன்று வெளியூரில் இருந்தவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் முகாமில் தனிப்பிரிவு காவல்துறையினர் உளவியல் ரீதியாக அச்சுறுத்தி வருகின்றனர். எனவே அகதிகளாகிய எங்களைப் பாதுகாத்து ஆதரவு தருமாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago