சென்னை மண்டல தலைமை அஞ்சல் அலுவலர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
'தேசிய பெண் குழந்தைகள் வாரம்' வரும் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை அஞ்சல் நிலையங்களில் கொண்டாடப் படவுள்ளது.
இதையடுத்து இந்த குறிப்பிட்ட தேதிகளில் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு மற்றும் குழந்தைகளுக்கான அஞ்சல் ஆயுள் காப்பீடு செய்யும் பெண் குழந்தைகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, தாம்பரம், சென்னை ஜி.பி.ஒ. மற்றும் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் இந்த திட்டம் பொருந்தும்.
அனைத்து பெண் குழந்தைகளும் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று ஜனவரி 24 முதல் 30ம் தேதிக்குள் சேமிப்புக் கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடங்கலாம்.
அஞ்சல் அலுவலக மண்டல நிலையங்களில் பிப்ரவரி 7ம் தேதி குலுக்கல் நடைபெறும். அப்போது புதிதாக கணக்கு தொடங்கிய பெண் குழந்தைகளில் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பரிசு வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு எல். அமலாசந்திரன் சென்னை மண்டல தலைமை அலுவலக துணை இயக்குநரை 044 28594745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago