திமுகவும், பாஜகவும், தமிழகத்தில் எப்போது வேண்டுமென்றாலும் சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம் எனக் கூறிவரும் நிலையில், மதுரையில் பாஜகவினர் ‘கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்’ என்று புதிய பிரச்சார கோஷத்தை முன்னிலைப்படுத்தி சுவர் விளம்பரம் செய்ய ஆரம்பி த்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதி முக பல அணிகளாக பிரிந்து ள்ளது. ஆனாலும், பெரும்பான் மை எம்எல்ஏ-களின் ஆதரவு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார். தற்போது அவரது ஆதரவு எம்எல்ஏ-கள் சிலர் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. மற் றொரு புறம் மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், திமுக, தமிழக பாஜக, ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுகவினர் (புரட்சித் தலைவி அணி) உள்ளிட்ட எதிர்க் கட்சியினர், ‘தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது, எந்த நேரத்திலும் சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம் எனக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தும் அரசியலில் ஈடுபடப் போவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். அதனால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடை ந்துள்ளனர். இந்நிலையில், தமிழக பாஜக ‘கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்’ என்ற புதிய பிரச்சார கோஷத்தை பேசத் தொடங்கி உள்ளனர். மதுரை நகரில் சாலைகள், வீதிகளில் மாவட்ட பாஜகவினர், சுவர் விளம்பரங்களில் இந்த வாசகத்தை எழுதி வருகின்றனர். திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுதான், ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி சுவர் விள ம்பரம் செய்து வருவதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த பிரச்சார கோஷத்துக்கு பாஜகவினரிடம் வரவேற்பு கிடை த்துள்ளது. ஆனால், கட்சிக்கு சரியான அடித்தளம் இல்லாத நிலையில், பாஜகவின் இந்த தேர்தல் கோஷத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற கோஷத்தை முன்னிறுத்தினார். அதுபோலவே காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைந்துவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் அர்த்தமில்லாத கட்சியாகி விட்டது. அதிமுக, திமுக கட்சிகள்தான் பிரதான கட்சிகள்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த பல பிரச்சினைகள், சிக்கல்களுக்கு இந்த இரண்டு கழகங்கள் மட்டுமே காரணம். அதனால், இரண்டு கழகங்கள் இல்லாத ஆட்சி அமைந்தாலே கவலையில்லாத தமிழகம் அமைந்துவிடும். அந்த ஆட்சி அமைக்கவே பாஜக விரும்புகிறது. திமுகவுக்கு மாற்று அதிமுக என்றும், அதிமுகவுக்கு மாற்று திமுக என்றும் போகாதீர்கள். இரண்டு கழகங்களும் ஒன்றுதான். இந்த இரண்டுக்கும் மாற்று பாஜகதான் என்பதை புரிய வைக்கவே இந்த சுவர் விளம்பரம். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. மக்களவை தேர்தலுக்கும் தயாராகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago