தாம் குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும் தமிழினத்தை ஜெயலலிதா வழிநடத்துவார்: மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம்

ஜெயலலிதா தான் குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும் தமிழினத்தை வழிநடத்துவார் என்று சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நிறை வேற்றப்பட்ட தீர்மானம்:

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதிமன்ற கோட்பாடுகளுக்கும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலுக்கும் எதி ரானது. இதனால் தமிழகம் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா ஏழை குடும்பத் தில் பிறந்தவர் அல்ல. 150 திரைப் படங்களில் நடித்து நியாயமான முறையில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியவர். நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்.

இதை மக்கள் உணர்ந்ததால் தான் 2001, 2011 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் ஜெயலலிதாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத் தனர்.

ஒரே வழக்கில் நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் தீர்ப்பு மாறுபடுகிறது. டான்சி வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் சென்று உடைத்தெரிந் தவர் ஜெயலலிதா.

அதேபோல சூழ்ச்சி செய்து, திட்டமிட்டு போடப்பட்ட இந்த வழக்கின் மீது மேல் முறையீடு செய்து குற்றமற்ற வர் என்று நிரூபித்து தமிழினத்தை மீண்டும் வழி நடத்துவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஜெயலலிதா மீது அளவிலா அன்பு கொண்ட பலர், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்று கூறி மாமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று சில மணித் துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE