நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் இது குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரை யில், நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் குறிப் பிட்டிருந்தது.
இதற்காக, டெல்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக பேரா சிரியர் அமிதாப் குண்டு தலைமை யில் இதுதொடர்பாக குழு அமைக் கப்பட்டது. இந்த மதிப்பீட்டுக் குழு, தனது அறிக்கையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்ச ரான நஜ்மா ஹெப்துல்லாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்ச கத்திடம் உள்ள ஆவணங்களின்படி, மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், 1,053 தனியார்களால் 18,388 சொத்துகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வருடத் தில் சுமார் ஏழு சதவிகிதம் உயர்ந் துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பெரும்பா லானவை மீது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவை களை விரைந்து முடிப்பதுடன், அந்த சொத்துகளை முறையாகப் பயன்படுத்தினால் வக்பு வாரியத் துக்கு கோடிக்கணக்கான வரு மானம் கிடைக்கும் என அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டு லட்சம் எண்ணிக்கையில் சொத்துகள் இருந்த போதும் சுமார் 160 சொத்துகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago