ராமேசுவரம் கடற்பகுதியில் சீகல் பறவைகள் மிதக்கும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் வரையிலும் பறவைகள் சீசன் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேல செல்வனூர், கீழ செல்வனூர், ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கு பிளமிங்கோ, ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வரத்துவங்கும்.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததினால் கண்மாய்கள் வறண்டும், நீர் நிலைகளும் நிரம்பவில்லை. பல மரங்கள் பட்டுப்போனதாலும், வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இலங்கை கடற்கரைகளின் அங்கமாக இருக்கும் சீகல் என்கிற அழகான கடற்பறவைகள் ராமேசுவரம் வரத் துவங்கியுள்ளன. அதிகபட்சம் இரண்டு கிலோ வரையிலும் எடையுள்ள இந்த பறவைகளை மீனவர்கள் நீர் காகங்கள் என்று அழைக்கின்றனர். தினமும் காலை 9 மணிக்கு சின்னச் சின்ன குழுக்களாக கூடும் இந்த பறவைகள் மாலை 4 மணி வரையிலும் கடலில் மிதந்தபடியும், பறந்தும் இரை தேடுகின்றன.
பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்பகுதிகளில் அதிகளவு வலம் வரும் இந்த பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும் சில சமயங்களில் சீகல் பறவைகள் கூட்டமாக கரையோரங்களில் வலம் வந்து வது சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago