வைகை அணை தண்ணீர் ஆவியா வதைத் தடுக்க தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டம் உருவானது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பொதுப்பணித் துறை உயர் அதிகாரி மாற்றப்பட்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் மிதக்க விடும் திட்டம் நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப் பட்டது. கூட்டுறவுத் துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ தெர் மோகோல்களை அணையில் மிதக்க விட்டார். நிகழ்ச்சியில் ஆட்சியர்கள் கொ.வீரராகவராவ் (மதுரை), என்.வெங்கடாச்சலம் (தேனி), மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. அணைப் பகுதியில் இருந்து அமைச்சர் புறப்படும் முன்பே தெர்மோகோல் திட்டம் தோல்வியடைந்தது உணரப்பட்டது. இதனால், திட்டச் செலவு ரூ.10 லட்சம் வீணானதாகவும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் தவறான யோசனையால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது பொதுப்பணித் துறை உட்பட அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்திட்டம் உருவானதன் பின்னணி குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வைகை அணையில் 162 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது உள்ளது. இதில் இருந்து மதுரைக்கு குடிநீருக்காக தினமும் 3.5 மில்லியன் கனஅடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அணை யில் தினமும் தண்ணீர் குறையும் அளவு 6 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதில், கடும் வெயிலால் 1.28 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீர் தினசரி ஆவியாவது தெரிந் தது. 3 நாள் ஆவியாகும் தண்ணீர், மதுரையின் ஒரு நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்ததால் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என பல வழிகளில் சிந் தித்தோம். இணையதளம் மூலம் சில விஷயங்களைத் தேடினோம். இதில், தெர்மோகோல், பிளாஸ்டிக் சீட், கருப்பு நிற பந்துகளை தண்ணீ ரில் மிதக்க விடலாம். இதனால் சூரிய ஒளி நேராக தண்ணீர் மீது படாது என்பதால் ஆவியாகிற அளவு 40 சதவீதத்துக்கும் மேல் குறையும் என தெரிந்தது.
தெர்மோகோல் தேர்வு
செலவு மிகக் குறைவு என்ப தால் தெர்மோகோலை தேர்வு செய்தோம். மீன் வளர்ப்புப் பண் ணைகள், சிறிய ஊரணிகள் போன்ற இடங்களில் தெர்மோகோலை நேரடி யாகவும், பலகைகளில் ஒட்டியும் பயன்படுத்தி ஆவியாவது தடுக்கப் படுவதை கண்டறிந்தோம். இந்த முறையை வைகை அணையிலும் செய்து பார்த்தால் என்ன என மதுரை ஆட்சியர் யோசனை தெரிவித்தார்.
இதனால் சோதனை அடிப் படையில் 200 சதுர மீட்டர் அள வுக்கு மட்டும் தெர்மோகோல் மிதக்க விட ஏற்பாடு செய்தோம். ஒரு தெர்மோகோல் சீட் ரூ.27-க்கு வாங்கினோம். இதை செயல்படுத்த மொத்த செலவு ரூ.6 ஆயிரம் ஆனது. இதை பொதுப்பணித் துறை அலுவலர்களே தங்கள் சொந்த பணத்தில் பகிர்ந்து கொண்டனர்.
ஏற்பாடுகள் தயாரானதும் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தெரிவித்தோம். நல்ல யோசனை என கருதிய அவர் தொடக்கி வைக்க வருவதாக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். 80 ஏக்கர் பரப்பு வரை தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அணையின் மையப் பகுதியில் தெர்மோகோல் சீட்களை அமைச்சர், ஆட்சியர்கள் மிதக்க விட்டனர். காற்று பலமாக வீசியதால் ஒரு மணி நேரத்தில் அனைத்து சீட்களும் கரை ஒதுங்கின. இத் திட்டம் செயல்பாட்டுக்கு உகந்த தல்ல என்பதை நேரடியாக அறிந்த தால் கைவிடப்பட்டது.
நிதி ஒதுக்கீடு இல்லை
சோதனை முயற்சியே தோல்வி யில் முடிந்ததால், இதுகுறித்த விவரங்களை மட்டும் அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை செலவழிக்க வில்லை. சோதனை முயற்சிக் கான செலவு ரூ.6 ஆயிரமும் பொதுப் பணித் துறை அலுவலர்களின் சொந்த பணம் என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க அமைச்சர் கே.செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
அதிகாரியை மாற்ற காரணம் என்ன?
தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியவர் மதுரை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன். இவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருப்புக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றும் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தெர்மோக்கோல் சோதனை பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால்தான் அவர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து முத்துப்பாண்டியன் கூறும்போது, ‘‘நான் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறேன். தற்போதைய மாற்றத்துக்கும், தெர்மோகோல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஓய்வுபெறும் வரை மதுரையிலேயே பணியாற்றவும் அனுமதித்துள்ளனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago