நெட்டிசன் நோட்ஸ்: ஜல்லிக்கட்டு போராட்டம்- வரலாற்றின் மவுனமும், அலறலும்!

By க.சே.ரமணி பிரபா தேவி

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரிப் போராடிவந்த இளைஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இது குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்வினைகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Athisha Vino

மெரினா போராட்டக்காரர்களுக்கு அரணாக நிற்பது மீனவர்களும் குப்பத்து பெண்களும்தான். காவல்துறையின் அத்தனை தடியடிகளையும் கல்லெறிகளையும் முன் நின்று தன்னுடைய மாரிலும் தலையிலும் வாங்கிக்கொண்டிருப்பது அந்த அழுக்கு சேலை கட்டிய பெண்கள்தான். கலங்கவைக்கிறார்கள் இந்த ஜனங்கள். நாம் போராடவேண்டியது இவர்களுக்காகத்தான்.

>Hariharasuthan Thangavelu

அடிச்சு உடைக்கிறதா இருந்தா அஞ்சே நிமிசத்தில பண்ணிருப்பான், அஞ்சு நாளெல்லாம் குழந்தை குட்டியோட அமைதியா உக்காரமாட்டான். இந்த எரிக்கிறது, உடைக்கிறது, கலவரம் பண்றதெல்லாம் மாணவர்கள் வேலையில்லை.

*

முடியும் தருவாயில் மூர்க்கம் காட்டுவது வரலாற்று தவறு.

Shanmuga Vadivu

தயவு செய்து யாரும் நெகட்டிவாக எதையும் பகிர வேண்டாம்.... மிக மிக சென்சிட்டிவான நேரம் இது...

Amudha Suresh

மாணவர்களின் போர்வையில் மற்றவர்கள்.....!

Saravanan Chandran

எளிமையாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வோம். போராடும் மாணவர்களை குண்டுக்கட்டாகக் கொண்டு போய் சிறையில் போட்டால்கூட பரவாயில்லை. தடியடி நடத்தி அவர்களது உணர்வுகளை அசைத்துப் பார்த்து வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டு விட்டு வருவீர்கள். அப்புறம் என்ன நடக்கும்? ஆங்காங்கே சாலை மறியல்கள் நடக்கும். போராட்டம் தீவிரமாகும். இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா?

விட்டிருந்தால் மெரினாவிலோ அலங்காநல்லூரிலோ அமைதியாக அமர்ந்திருந்து விட்டு, ஏதோ ஒரு புள்ளியில் அமைதியாக வெளியேறியிருக்கவும் செய்திருப்பார்கள். தேன்கூடுதான் அது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதில் கல்லெறிந்தது நீங்கள்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

Senthil Jagannathan

உங்களுக்கு தெரிந்தவர்கள், களத்தில் உள்ளவர்களை பத்திரமாக வீட்டிற்கு வரச்சொல்லுங்கள்!

போராட இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உயிரோடு இருப்பது முக்கியம்!!

Naveen Gowtham

உடன் பிறப்புகளே மெரினாவை விட்டு அமைதியாக வெளியேறுங்கள். உங்கள் பெயரை சொல்லி நகரமெங்கும் கலவரம் ஆரம்பமாகிறது , தவறான செயல்களுக்கு நாம் உதாரணமாக இருக்க வேண்டாம் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன்.

>Vishal Raja

ஆம். அப்படித்தான், வரலாற்றின் சில பக்கங்களை மவுனமும் சில பக்கங்களை அலறலும் சில பக்கங்களை இருட்டும் நிறைத்துள்ளன.

>Britto Allocious

அரசாங்கத்தையே பயமுறுத்திவிட்டோம் என பெருமை கொள்ளுங்கள்... வரலாறு படைத்துவிட்டோம் என கொண்டாடுங்கள்.. கேட்டதில் பாதி கிடைத்தாலும் மீதிக்காக அல்லாமல், நீதிக்காக போராடுங்கள்.. இப்பொழுது வேண்டாம்.. இன்னும் பொழுதுகள் இருக்கின்றன..

Umanath Selvan

"ஜல்லிக்கட்டுக்கு ஹாஃப்டே லீவாம்பா” அரைநாளில் வீடு திரும்பிய குழந்தை சொல்லும் வார்த்தைகள்.

ஆண்டவா, எல்லா குழந்தைகளும் பத்திரமாய் வீடு திரும்பனும். எல்லா குழந்தைகள் என்றால் எல்லா குழந்தைகளும் தான்.

Prabhu Mpr

அரசாங்கம் ஓரளவுக்குத்தான் இறங்கிவரும், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவற விட்டுட்டோம்.

Aruran Visu

ஒரு தந்தையின் மனநிலையை வார்த்தைகளில் கொட்டி விடமுடியாது. நீங்கள் தந்தையான பின்பே உணரமுடியும். #ஜல்லிக்கட்டு போராட்டம்... கவனம் பிள்ளைகளே.

Shan Karuppusamy

சுமுகமாக முடிந்துவிட்டால் அரசியல் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் அரசியல் இது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். வழக்கம் போல இரையாகப்போவது அப்பாவி மாணவர்கள் அல்லது பொதுமக்கள் என்பதுதான் வேதனை.

பூ.கொ. சரவணன்

வன்முறையும், அடக்குமுறையும் சூழ்கிற போராட்டத்தில் முதல் பலி உண்மைதான். அறவழிப் போராட்டங்கள் மீதான நம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டதாக நேற்று வரை கொண்டிருந்த மகிழ்ச்சி முழுக்க வற்றிப்போயிருக்கிறது.

உயிரிழப்பின்றி, காயமின்றி அனைவரும் வீடு போய் சேர வேண்டும். 'நான் அப்பவே சொன்னேன்' வகை பிரசங்கங்களுக்கு இதுவல்ல நேரம். கவலையோடு எதுவும் செய்ய முடியாத இந்த நிலை வலிமிகுந்தது. ஒருங்கிணைத்து பிள்ளைகளை காப்பதும், வன்முறை பரவாமல் தடுப்பதும் தேவை.

>Banu Reka TR

ஒரு போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நடத்திக் காட்டி விட்டார்கள். அதை எப்படி முடித்து வைக்க வேண்டும் என்று இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லையே இந்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும்.

Mukil Thangam

நொச்சிக்குப்பம் அக்காக்களும் அயோத்திக்குப்பம் அண்ணன்மார்களும் பிள்ளைங்கல ஏன் அடிச்சிங்கனு எங்களுக்காக போலீஸோடு மல்லுக்கட்டியதுதான் எனக்கு ஜல்லிக்கட்டு.....

Ahila Puhal

கீழே கிடக்கும் குப்பையை கூட குப்பைத்தொட்டியில் போட்டு, இருந்த இடத்தை சுத்தமாய் வைத்திருந்த நம் இளைஞர்களால் நிச்சயமாய் இந்த தீவைப்பு வேலையைச் செய்திருக்க முடியாது.

Sabari Shankar TheJubilant

நீங்கள் உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து வாட்ஸ்அப் மற்றும் முகநூல் இன்பாக்ஸ் மூலம் பொய்யான / தவறான தகவல்களையும், உணர்வுகளை தூண்டும் எதிர்மறையான செய்திகளை அனுப்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்.

Kathir Velu

போராட்டம் ஆரம்பத்தில் மாணவர்களுடையது. முடிவில் மாணவர்களுடையதல்ல. ஆகவே ”மாணவர்கள் போராட்டத்தில் கலவரம்” எனச் சொல்லாதீர்கள்!

*

நண்பர்களே கலகம் எளிதுதான். அந்த இடத்தில் இருக்கும் உங்களால் மிக எளிதாக தீர்வும் கொடுக்க முடியும்! செயல்படுங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்