இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32மீனவர்களின் காவலை, திரிகோணமலை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.
கடந்த அக்டோபர் 15 அன்று காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிச்ச சென்ற அன்பழகன், ஆனந்தவேலு, செல்லத்துறை மற்றும் பொன்னுச்சாமி ஆகிய நான்குபேருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 32 மீனவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதி நீர்பரப்பில் மீன்பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையினர் அக்டோபர் 16அன்று கைது செய்தனர்.
மீனவர்களின் 4 படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை இலங்கை கடற்படை திரிகோணமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திரிகோணமலை காவல்துறையினர் தமிழக மீனவர்களை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.
32 மீனவர்களின் காவல் செவ்வாய்கிழமை முடிவடைந்ததை அடுத்து திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மீனவர்களின் காவலை ஜனவரி 6 வரை காவலை ஏழாவது முறையாக நீட்டித்து உத்திரவிட்டார்.
இதனையடுத்தது 32 காரைக்கால் மீனவர்கள் மீண்டும் திரிகோணமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago