தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 12வது சம்பள ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை உடன்பாடு கடந்த 31.08.2013 அன்றுடன் முடிவடைந்தது, 01.09.2013 முதல் புதிய சம்பள உயர்வு அமுல்படுத்துவதற்குரிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது,
விலைவாசி உயர்வு ஒருபுறம். சம்பளக் குறைவு மறுபுறம் என அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தையை துவங்காமல் சாக்கு போக்குக்காக ஏதோ ஒரு காரணத்தை கூறி காலதாமதம் செய்வது கண்டிக்கதக்கது.
எனவே உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களிடம் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இல்லையெனில் அரசு போக்குவரத்து கழக தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தின் முன்பாக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago