விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து மனு: மீண்டும் விசாரித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

By ஜா.வெங்கடேசன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, தீபக் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

2011 தமிழக சட்டமன்றத் தேர்த லில் ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது.

“தவறை திருத்தி மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அதி காரிகள் காலஅவகாசம் அளிக்க வில்லை என்றும் அவர்கள் விஜய காந்துக்கு ஆதரவாக செயல்பட்ட னர்” என்றும் குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இதனை விசா ரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் ஜெயந்தி மேல்முறையீடு செய் தார். விஜயகாந்த் தேர்தல் வெற் றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், சட்டமன்றத்தில் பங் கேற்க தடை விதிக்க வேண்டும், எம்.எல்.ஏ.வுக்கான சலுகைகளை வழங்கக்கூடாது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, தீபக் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு, கால தாமதமாக மனு செய்யப்பட்டிருப் பதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று ஜெயந்தியின் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் முறையிடப் பட்டது. இதைத் தொடர்ந்து அவரது மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

ஜெயந்தியின் வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு உயர் நீதிமன்றம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஜெயந்தியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்