வரும் ஜனவரி மாதம் முதல் முடிவெட்டுதல், முகச் சவரம் செய்தல் ஆகியவற்றின் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம். முனுசாமி மற்றும் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் பி.செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
கட்டிங்- ரூ.100, ஷேவிங் - ரூ.50
சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்துவிட்டதால் முடிதிருத்தும் கட்டணம் ஜனவரி 2014 முதல் உயர்த்தப்படுகிறது. பெரியவர்களுக்கு முடிவெட்டு வதற்கு சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. அதேபோல முகச்சவரம் செய்வதற்கு சாதாரண கட்டணம் ரூ.50 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.
சிறுவர் கட்டணம்
சிறுவர்களுக்கு முடிவெட்டும் சாதாரண கட்டணம் ரூ.80 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.120 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. சிறுமிகளுக்கு முடிவெட்ட சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.
இவை தவிர, முடி கருப்பாக்குவதற்கு சாதாரண கட்டணம் ரூ.150 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் மற்றும் ஹேர் கலரிங் செய்ய சாதாரண கட்டணம் ரூ.200 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago