ஆர்.கே.நகரில் குழந்தைகளுக்கும் பணம் கொடுக்கப்பட்ட அவலம்

By டி.கே.ரோஹித்

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு புதிதல்ல. ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளிலும்கூட இதேக் காரணங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வாட்ஸ் அப்களில் வீடியோக்கள் பல உலா வரும் நிலையில் 'தி இந்து' ஆங்கிலம் மேற்கொண்ட கள ஆய்வில் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் பணம் கொடுக்கப்பட்டது அம்பலமாகியிருக்கிறது.

தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்னாள் கொருக்குப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரபரப்பான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்த சம்பவம் இது.

ஒரு சிறுவனை வேனில் சென்ற ஒருவர் அழைத்தார். பின்னர் அவரது கையில் பணத்தைக் கொடுத்தார். அந்தச் சிறுவனை மடக்கிய நாம் அவரிடம், "என்ன கொடுத்தார் எனக் கேட்டோம்?". அதற்கு அச்சிறுவன் பணம் கொடுத்தார்கள் என்றார். எதற்காக எனக் கேட்டோம். எந்தக் கட்சிக்கு உன் ஆதரவு என்றார்கள்? நான் இரட்டை இலை என்றேன். உடனே எனக்கு பணம் கொடுத்தார்கள் என்றார். எவ்வளவு பணம் என வினவினோம். ரூ.40 எனக் கூறிவிட்டு அருகிலிருந்த ஒரு சந்துக்குள் அச்சிறுவன் சென்றார். இதுபோன்று இருவேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவத்தை நாங்கள் நேரில் பார்த்தோம்.

கண் விழித்து பணத்தைப் பெற்ற வாக்காளர்கள்:

ஆர்.கே.நகருக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக மக்களிடம் விசாரித்தபோது பலரும் தங்களுக்கு தெரியாது என்றனர். ஒரே ஒருவர் மட்டும் அதிகாலை 4 மணி அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதற்காக பலரும் கண்விழித்து காத்திருந்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றார்.

பணத்தை கேட்டுப் பெற்ற வாக்காளர்கள்:

இதேபோல் இன்னொரு நிகழ்வையும் பார்க்க நேரிட்டத்து. ஓரிடத்தில் சில அரசியல்வாதிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு நபர், ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினார். என்ன வேண்டும் என்று எரிச்சலுடன் அந்த அரசியல்வாதிகள் அவரிடம் கேட்டனர். அப்போது ஆதரவாளர் ஒருவர் அது பூத் சிலிப் என விளக்கினர். உடனே அந்த அரசியல்வாதி சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். இது ஒரு நிமிடத்தில் நடந்தது.

அரசியல்வாதிகள் தாமாக முன்வந்து பணம் கொடுத்தது, வாக்காளர்கள் கேட்டுப் பெற்றுக் கொண்டது, அதிகாலையில் கண்விழித்து காத்திருந்து பெற்றுக்கொண்டது என பல்வேறு தகவல்களும் கிடைத்த நிலையில்தான் இடைத்தேர்தல் ரத்தாகியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்