ராகுல் பேசினாலே பாஜக-வுக்கு வெற்றி: இல.கணேசன் பேட்டி

By செய்திப்பிரிவு

மோடி பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. ராகுல் பேசி னாலே, மோடி வெற்றி பெறுவார் என்று இல.கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக இல.கணேசன் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த ஆலோ சனையில் ஈடுபட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இந்தக் கூட்டணியில் ஏற்கெனவே ம.தி.மு.க மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன.

தற்போது தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எங்களது கூட்டணி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு சவால்விடும் கூட்டணியாக இருக்கும். தி.மு.க-வில் இருந்து தனது மகனான மு.க.அழகிரியை நீக்கியது கட்சியில் தீவிர பிரச்சினை உள்ளதை காட்டுகிறது. தேர்தல் நேரத்தில் கட்சியை பலப்படுத்த நினைப்பார்கள், ஆனால், மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் தென் மண்டல பொறுப்பாளரை நீக்கியது ஏதோ உட்கட்சி பிரச்சினையாக அல்லாமல், இந்த நிகழ்வு முக்கியத் துவம் வாய்ந்ததாக உள்ளது.

குஜராத் கலவரத்துக்கு நரேந்திர மோடி காரணம் அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ராகுல் இது சம்பந்தமாக பேசுவது வேதனையாக உள்ளது.

நரேந்திர மோடி நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ராகுல் காந்தி பேசினாலே மோடி வெற்றிபெறுவார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால்தான், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்