கடலரிப்பைத் தடுக்க கடலோரங்களில் அரசின் வளர்ச்சி திட்டங்களை வெகுவாக குறைக்க வேண்டும்: பேராசிரியர் ஜனகராஜன் வேண்டுகோள்

By ச.கார்த்திகேயன்

கடலரிப்பைத் தடுக்க கடலோரங் களில் அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் சென்னை கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் எண்ணூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதி மீனவர் குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இன்னும் பல வீடுகளில் கடல் நீர் புகுந்து, வீடுகளெங்கும் கடல் மணல் மற்றும் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் தங்கள் உடைமைகளுடன் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் கடல் சீற்றம் குறையாத தால், அப்பகுதி வாழ் மீனவ மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். சேதமடைந்த வீடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கணக் கெடுத்து, அது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவ பெண் ஜெயா கூறும்போது, கடல் சீற்றத்தால் உயரே எழும் அலைகள், வீடுகளுக்குள் புகும் கடல் நீர் ஆகியவற்றை பார்க்கும்போது, எங்களுக்கு சுனாமியை நினைவுபடுத்துகிறது. சுனாமியின்போது, எங்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்குவதாக கூறிய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் இப்போது வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், திக்கற்று நிற்கிறோம். இப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். கட்டுமர மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. கடந்த ஒருவாரமாக வருமானம் இன்றி இருக்கிறோம். இதற்கு அரசு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

தமிழக கடலோரப் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் கடல் அரிப்புக்கான காரணம், அதற்கான தீர்வுகள் குறித்து சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:

நமது தமிழ் இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம் என குறிப்பிடப்படுகிறது. கடல் காற்றின் வேகம், திசை ஆகியவை இயற்கை சார்ந்தது. இதை கணிக்க முடியாது. இதன் காரணமாக அலைகள் உயரே எழும்புவதும், சீற்றம் ஏற்படுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதன் அலைகள் கரைக்கு வரும் பகுதியை கடல் சார்ந்த இடம் என்று குறிப்பிடுகிறோம். அவ்வாறு அலைகள் கரைக்கு வருவது கடலின் உரிமை.

அந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மின் திட்டம், சுற்றுலா வளர்ச்சி திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது கடலின் உரிமையை பறிக்கும் செயல். அதற்கு கடல் தனது எதிர்ப்பை காட்டும்போது, அதை கடல் அரிப்பு என்கிறோம்.

கடல் அரிப்பை தடுக்க, தடுப்பு சுவர் அமைப்பது, கற்களை கொட்டுவது எல்லாம் தீர்வாக இருக்காது. இவ்வாறு செய்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கடலரிப்பு ஏற்படாது. ஆனால் வேறு இடத்தில், கடல் அரிப்பு மிக கடுமையாக இருக்கும். இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் இதுபோன்ற சிக்கல்களை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆகவே, கடலோர பகுதிகளில் அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமே கடல் அரிப்பை தடுக்கும் தீர்வாக இருக்கும் என்றார்.

பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்