தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வுக்கு முகவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள், லிட்டருக்கு ரூ.2-ஐ உயர்த்தியிருப்பதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திராவில் இருந்து வரக்கூடிய தனியார் பால் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி போன்றவை தங்களின் பாலினை லிட்டருக்கு ரூ.2-ஐ திங்கள்கிழமை முதல் உயர்த்துவதாக சனிக்கிழமை பால் முகவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

பொதுமக்களையும், பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக விலை உயர்வை அறிவித்துள்ள தனியார் பால் நிறுவனங்களை வண்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு அன்மையில் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி கொடுத்தது.

இதனை காரணம் காட்டும் இந்த நான்கு பால் நிறுவனங்கள், தங்களுக்கும் பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி லிட்டருக்கு ரூ.2-ஐ இந்த தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியது.

இந்த நான்கு முன்னணி பால் நிறுவனங்களும் ஆந்திராவில் தான் 70 சதவீதம் பாலினையும், மீதமுள்ள 30 சதவீதம் பாலினை தமிழகத்தில் கொள்முதல் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறையாவது பால் விலையை, தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி விடுகின்றன. எனவே, பால் விலையை உயர்த்துவதற்கு முன்பு பொதுமக்கள், பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். பால் முகவர்களின் வருமானத்தை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தன்னிச்சையான பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் தனியார் பால் நிறுவனங்களின் சென்னை அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்காவிட்டால், சென்னையில் கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்