பாஜக கூட்டணி முரண்பாடுகளின் கூடாரம்; தேர்தல் வரை நீடிப்பதே சந்தேகம்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி

பாஜக கூட்டணி முரண்பாடுகளின் கூடாரம். இந்தக் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பதே சந்தேகம்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: பாஜக கூட்டணியில் உள்ள மதிமுகவின் தேர்தல் அறிக்கை தேசத்துக்கு எதிரானது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புலிகள் மீதான தடை நீக்கம், நாட்டின் பெயரை மாற்றுவது, தமிழீழம் போன்ற கோரிக்கைகளை பாஜகவே ஏற்கவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது எண்ணங்களை, கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார். அவரது தேர்தல் அறிக்கையில் பாஜகவுக்கு பொறுப்பு இருக்கிறது.

இதுபோன்ற விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிகளை உரிய கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும். ஆனால், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை கட்டுப்படுத்தத் தவறி விட்டது. பாஜக கூட்டணி, முரண்பாடுகளின் கூடாரமாக உள்ளது. அந்தக் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

காங்கிரஸ் மீது 10 குற்றச்சாட்டு

களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதற்கு பதிலளித் தோம். ஆனால், அவர் தொடர்ந்து காங்கிரஸ் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். அவரது பிரச்சாரம் காங்கிரஸுக்கு எதிராக எந்த விளைவையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனால்தான் அவர் காங்கிரஸை மட்டும் குறை கூறுகிறார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் உதவிகளால்தான் பல திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்

காங்கிரஸ் மத்திய அமைச்சர் கள் தேர்தலில் போட்டியிடாமல் ஓடுவதாக வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். பாஜகவில்தான் கட்சியை விட்டே முன்னாள் அமைச்சர்களும் மூத்த தலைவர்களும் ஓடிப் போகும் நிலை உள்ளது. இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE