அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கை குழப்பத்தால் பெண் பயணிகள் திண்டாட்டம்

By என்.முருகவேல்

தமிழக அரசின் சார்பில் இயக்கப்படும் அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகம் 300 கி.மீட்டருக்கு மேல் உள்ள தொலைதூர பயணத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்துகளை இயக்கி வருகிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் நாள்தோறும் ஒன்றரை லட்சம் பயணிகளுக்கும் மேல் பயணிக்கின்றனர்.

இதில் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது. அதிலும் 70 சதவீதம் பேர் முன்பதிவின் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பதிவு செய்வோரில் பெண்கள் ஒவ்வொரு முறையும் சில சங்கடங்களைச் சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது. சென்னையில் இருந்து தஞ்சை செல்ல முன்பதிவு செய்திருந்த ஒரு பெண், பயணத்துக்காக பேருந்தின் இருக்கைக்கு சென்றபோது, அவரது இருக்கைக்கு அருகே ஒரு ஆண் அமர்ந்திருந்தார். இருக்கை மாறி உட்காரும்படி அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அடுத்த இருக்கையில் இருந்த மற்றொரு நபரும் இடம்மாறி அமர மறுத்துவிட்டார்.

அந்தப் பெண், நடத்துநரிடம் முறையிட்டிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டும் அந்த நபர்கள் தத்தம் இருக்கைகளை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. அந்தப் பெண்ணோ முன்பதிவு செய்திருந்த அதே இருக்கையில் சுமார் 8 மணி நேரம் மிகுந்த சங்கடத்துடன் அமர்ந்து செல்ல நேர்ந்தது.

பண்ருட்டியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், கோவையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். வாரம்தோறும் சொந்த ஊர் வந்து போகிறார். அவரும் புதுச்சேரியில் இருந்து - கோவை வரை இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்தபோது, இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்ததால், தற்போது தனியார் சொகுசுப் பேருந்தில் செல்வதாகத் தெரிவித்தார்.

கர்நாடக அரசு சொகுசுப் பேருந்துகளில் முன்பதிவின்போதே தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள், ஆண் இருக்கை அருகே முன்பதிவு செய்ய இயலாத அளவுக்கு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி உள்ளனர். தமிழக அரசு விரைவுப் பேருந்துகளிலும் இதுபோன்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார் அரசு ஊழியர் சீனிவாசன்.

அனைத்து தனியார் பேருந்து முன்பதிவிலும் பெண்களுக்கான இருக்கையில் குளறுபடி கிடையாது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வணிகத்துறை மேலாளர் ராஜன்பாபுவிடம் கேட்டபோது, “தற்போது பெண்களுக்கென்று தனியாக 2 இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றபடி முன்பதிவின்போதே பாலின விவரம் குறித்து தெரியப்படுத்துவது போன்ற வழிவகைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” என் றார்.

இந்தப் பிரச்சினையால் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தனியாக பயணம் மேற்கொள்ள பெண் பயணிகள் சங்கடப்படுகின்றனர். அதிலும் விழாக் காலங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதாக தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்