டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, தமிழகத்துக்கு தேவையான நிதி தரவேண்டும் என கேட்காதது ஏன் என்று சட்டப் பேரவையில் தேமுதிகவினரிடம் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் திங்கள் கிழமை தொடங்கியது. இதில் தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் பேசியதாவது:
தமிழகத்தில் திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை. மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் உள்ளன. திருக்கோவிலூர் பஸ் நிலைய பிரச்சினை தொடர்பாக பத்து முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
எங்களது அனைத்து கோரிக்கைகளும் கிடப்பில் போடப்படுகின்றன. எதற்கும் நிதியும் ஒதுக்குவதில்லை. நாங்கள் கோரிக்கை வைத்தால் செய்வதில்லை.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற போதுமான அளவு நிதி தேவை. சமீபத்தில் நீங்கள் எல்லோரும் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தீர்கள். அப்போது பிரதமரிடம் தமிழகத்துக்கு நிதி கொடுங்கள் என்று ஏன் கேட்க வில்லை. அதை விடுத்து வேறு ஏதோ பேசி இருக்கிறீர்கள். டெல்லியில் கூட்டணி பேசி தோல்வியடைந்து வந்திருக்கிறீர்கள்.
அமைச்சர் கே.பி.முனுசாமி: இவர்கள் நிதி கேட்டு இருந்தாலும் தமிழக அரசுக்காக கேட்டிருக்க மாட்டார்கள். வேறு எதற்கோ கேட்டிருப்பார்கள். இங்கு இவர்கள் பேசுவது எங்கப்பன் குதிருக் குள் இல்லை என்பதுபோல் உள்ளது.
(இதற்கு தேமுதிகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்)
மோகன்ராஜ் (தேமுதிக): இன்றைக்கு தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதுதான் தமிழகம் முழுவதும் பேச்சாக உள்ளது.
அமைச்சர் வைத்திலிங்கம்: எங்க அம்மா (ஜெயலலிதா) கூட்டணி பற்றி கவலைப்படுவதில்லை. அவர் கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்கும் வல்லமை படைத்தவர். ஆனால் கூட்டணி விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் என்பது பத்திரிகைகளில் பார்த்தால் தெரிகிறது.
மோகன்ராஜ்: உங்களைப் பற்றியும் தான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். பத்திரிகைகளில் வருவதை வைத்து கேவலம் என பேசக்கூடாது. பத்திரிகை செய்திகளை வைத்து பழி சுமத்தாதீர்கள்.
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பிரதமரைச் சந்தித்துள்ளனர். தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, மின்சார பிரச் சினைகளை தீர்க்க வேண்டும் என்று இங்கு பேசுபவர்கள், அதற்குத் தேவையான நிதியை தமிழகத்துக்கு தரவேண்டும் என்று பிரதமரிடம் சொன னார்களா? இயற்கை இடர்ப்பாடு ஏற்படும் நேரங்களில் முதல்வர் நிதி கேட்டும் டெல்லியில் இருப்பவர்கள் தருவதில்லை.
தமிழகத்துக்கு தேவை யான மானியங்களும் தருவதில்லை. தேமுதிகவினர் டெல்லி போனார்கள். ஏதோ பேசினார்கள். கனமாக கிடைக் கும் என்று சென்றவர்கள் ஏமாந்து குழப் பத்தோடு திரும்பி வந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago