ஐ.டி. நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களாக உள்ள டாடா கன்சல்டன்சி மற்றும் விப்ரோ ஆகியவை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளாக அறிவித்திருப்பது சட்டவிரோதமான செயலாகும். இதில், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் மட்டும் 25 ஆயிரம் ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாக உள்ளனர். விப்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற உள்ளது.

இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களையும், படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் பெற்ற லாபத்தை விட 37.7 சதவீதம் கூடுதலான லாபம் ஈட்டியுள்ள நிலையில், ஆட்குறைப்பு செய்வது என்பது சமூக பாதுகாப்பை நிராகரிக்கும் செயலாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்