மன்னார் வளைகுடா பகுதியில் அலை யாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப் படுவதால் கடல்வாழ் சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதி யானது தீவு சூழல், அலையாத்திக் காடுகள் சூழல், கடல்புல் சூழல் மற்றும் பவளப்பாறை சூழல் என நான்கு வகையான சூழல் அமைப்புகளை கொண் டது. 21 தீவுகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையாக பாதுகாக்கப் பட்ட கடல்வாழ் உயிர்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பரப்பின் மிக முக்கியமான, பாதுகாக்கப்பட வேண்டிய அலையாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி அமைப்புசாரா தொழி லாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் இயற்கை உயிர் அரண்களாக அலை யாத்திக் காடுகள் விளங்குகின்றன. இவை புயல், ராட்சத அலை, ஆழிப்பேரலை, பருவகால மாற்றம், அலை உயர்வு செயல்கள் மற்றும் கடல் அரிப்பு போன்ற கடற்கரை தீமைகளின் போது வேகத் தடைகளாக சேவை புரிந்து கடற்கரையில் உள்ள பகுதிகளை பாதுகாக்கின்றன.
மீன், இறால், நண்டு மற்றும் நத்தைகள் இனப்பெருக்கம் செய் யும் உற்பத்தி தளமாகவும் அலை யாத்தி காடுகள் விளங்குகின்றன.
பல்வேறு வகையான உயிரினங் கள் பல்லுயிர் பெருக்கம் செய்யவும், இடம்பெறச் செய்யவும் ஏதுவான பகுதியாக அலையாத்தி காடுகள் இருக் கின்றன. உயிரினங்களுக்கு உணவு வளையமாக இவை விளங்குகின்றன. காற்றில் கலந்துள்ள நச்சுகளை போக்கி, தூய்மையான காற்றையும் அலையாத்தி காடுகள் வழங்குகின்றன.
இயற்கை சூழலுக்கும், மனித சமூகத் துக்கும் மிகப்பெரிய அளவில் பயன் தரும் அலையாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. நகரை அழகு படுத்துகிறோம் என்ற போர்வையிலும், வளர்ச்சி என்ற பெயரிலும், நடை பாதை வழித்தடங் களுக்காகவும், வெளித் துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காக வும், அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காகவும் அலையாத்தி காடு கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளில் உள்ள அறிஞர் கள், விஞ்ஞானிகள், உயிர்ச்சூழலுக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் அலையாத்திக் காடுகளை எவ்வாறு அழிவில் இருந்து மீட்கலாம், புதிதாக வளர்க்கலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால், தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் துறைமுகத்துக்கு சொந்தமான பகுதியில் உள்ள அலை யாத்தி காடுகளை சிலர் தீயிட்டு கொளுத்தி யும், வெட்டியும் அழித்துள்ளனர்.
அலையாத்திக் காடுகளை எரித்தவர்கள் மீதும், அழித்தவர் கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிர்ச்சூழல் நிறைந்த அலையாத்திக் காடுகளை பாது காப்பதற்கான உறுதியான, கடுமையான செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago