முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு வரும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை, தஞ்சாவூரில் அமைக்க கோரிக்கை விடுத்ததால் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான போரா ட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்காக, மதுரை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை போன்ற இடங்கள் பரிந்துரைப்பட்டியலில் இருந்ததாக கூறப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு, மதுரை தோப்பூர் அருகில் டி.கோனப்புதுப்பட்டியில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைப்பதற்காக நான்கு வழிச்சாலை அருகே 200 ஏக்கர் தமிழக அரசின் தரிசு நிலத்தை பார்வையிட்டனர்.
இதுபோல் மற்ற 4 இடங்களையும் மத்திய குழு ஆய்வு செய்து சென்றது. இதில் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் தமிழகத்தின் மையமாக இருக்கும் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்து வமனை அமைக்க மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக முதலமை ச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் பிரதமரை சந்தித் தபோது தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூர் அருகில் உள்ள செங்கிப்பட்டியில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்பிறகு மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு இன்று 15-ஆம் தேதி பழங்கா நத்தம் நடராஜ் தியேட்டர் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதற்கட்டமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது:
கரூர், ஈரோடு, கோவை, போ ன்ற மேற்கு மாவட்ட ங்களில் இருந்தும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் குறைந்தபட்சம் 1 மணி நேரத்தில் இருந்து அதிகப்பட்சம் 3 மணி நேர காலத்திற்குள் மதுரையை அடையலாம். சபரிமலை, பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை வழியாக வந்து செல்கின்றனர். அதனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தின் 18 மாவட்டங்களை சேர்ந்த அதிகளவு மக்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும். 1 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்திலும் பிரசவத்தின் போது ஏற்படும் கருவுற்ற பெண்கள் இறப்பு விகிதத்திலும் மதுரை மாவட்டம் தமிழக அரசால் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற மற்ற நான்கு மாவட்டங்களை விட பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
சென்னையில் ஐஐடி(Indian Institute of Technology) திருச்சியில் என்ஐடி(National Institute of Technology) கோவையில் டெக்ஸ்டைல் மானேஜ்மெண்ட் நிறுவனம் (sardhar Vallabhai Patel National Institute of Textile Management) தஞ்சாவூரில் ஐஐசிபிடி(Indian Institute of Crop Processing Technology) போன்ற நிறுவனங்கள் நிறுப்பட்டுள்ளன. ஆனால் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான மதுரையில் அகில இந்திய அளவிலான எந்த ஒரு உயர் கல்வி நிறுவனங்களும், மருத்துவ நிறுவனங்களும் அமைக் கப்படவில்லை. மதுரையில் இதுவரையில் ஒரு பொதுத்துறை நிறுவனமும் அமைக்கப்படவில்லை என்றார்.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ஏன் வேண்டும்?
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(All India Institute of Medical Science) மருத்துவமனை மதுரையில் அமைந்தால் தென் மாவட்டங்களை சேர்ந்த 2.60 கோடி மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தை சேர்ந்த நோயாளிகள், தங்கள் நோய்களுக்கு சிறப்பு மருத்துவமனையை நாட வேண்டிய நிலை இருக்கிறது. அதனால், நோயாளிகளுக்கு உடனடியாக உயர் சிகிச்சைகள், சிறப்பு சிகிச்சைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏறப்டுகிறது.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உயர் மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டியை காரணம் காட்டி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரைக்கு வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், போராட்டங்கள் மூலம், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை பெற மக்கள் முடிவுவெடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago