தென் மேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்திருப்பதாவது:
"காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை புயல் சின்னமாக மாறியுள்ளது. இது சென்னையிலிருந்து 530 கி.மீ தூரத்திலும், இலங்கையின் திரிகோண மலையிலிருந்து 350 கி.மீ தூரத்திலும் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது அதிதீவிர புயலாக மாறும். இது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்தில் மழை குறைவாகவே பெய்யும். ஆனால் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான மழை பெய்யும். தரைக்காற்று பலமாக வீசும" என்றார்.
இதனிடையே, காரைக்கால், பாம்பன், புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago