அதிகம் நீரை தேக்கி வைக்க ஏதுவாக மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: தொடர்ந்து வலியுறுத்தும் டெல்டா விவசாயிகள்

By வி.சுந்தர்ராஜ்

காவிரி டெல்டா மாவட்டங்களான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி நீரைக் கொண்டு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது. மேலும் சென்னை உட்பட தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு காவிரியால் குடிநீர் கிடைத்து வருகிறது.

கர்நாடகாவில் மழை வெள்ள காலங்களில் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, பின்னர் டெல்டா மாவட்ட பாசனத்துக்கு வழங்கப்படுகிறது. மேட்டூர் அணையில் அதிகளவு மண் மேடிட்டுள்ளதால் அதனைத் தூர்வார வேண்டும் என காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியபோது, “124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 100 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 20 அடிக்கு மேல் மணல், சேறு சகதி உள்ளது. இதனால் குறைந்த கொள்ளளவு தண்ணீரையே தேக்கி வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

கோடைகாலமான தற்போது அணையைத் தூர்வாரினால் எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும். அணை கட்டப்பட்டது முதல் இதுவரை தூர்வாரப்படவில்லை. இப்போதாவது அணையைத் தூர்வாரி சுத்தம் செய்தால்தான் இனியேனும் ஓரளவுக்காவது நீரை சேமித்து வைக்க முடியும்” என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் சுந்தர விமலநாதன் கூறியபோது, “மேட்டூர் அணையைத் தூர்வார வேண்டும் என கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். அணையில் தற்போது 30 அடிக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அணையின் நீர்த்தேக்கம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தூர் வார வேண்டும்.

தமிழகத்தில் அதிக மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்காகப் பயன்படும் காவிரி நீராதாரத்தைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

வெ.ஜீவக்குமார், சுந்தர விமலநாதன்

அரசு நிதி தேவையில்லை இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன் கூறியபோது, “இன்றைய காலகட்டத்தில் மேட்டூர் அணையைத் தூர் வாருவது அத்தியாவசியமானது. அணையைத் தூர்வார தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை. அப்பகுதியில் அரசு சார்பில் அளவீடு செய்து இடத்தைக் காட்டிவிட்டால் சாலைஅமைப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் தேவையான மண்ணைப் பணம் கொடுத்து எடுத்துக்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயாராக உள்ளனர்.இப்பணியை ஒருவருக்கு மட்டுமே வழங்காமல், பலருக்குப் பகிர்ந்து வழங்கினால் ஒரே மாதத் தில் தூர் வாரிவிடலாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்