அழகிரியை நீக்கியதால் திமுகவில் எந்த மாற்றமும் நடந்துவிடாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாடு, நெல்லையில் பிப். 16-ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு சீட் கேட்பது குறித்த எண்ணம் இப்போது இல்லை.
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியது அவர்களது உள்கட்சி பிரச்சினை. இதை தந்தை, மகனுக்கு இடையே நடந்த பிரச்சினையாகவே கருதுகிறேன். அழகிரி நீக்கத்தால் திமுகவில் எந்த மாற்றமும் நடந்துவிடாது. திமுக சக்தி இழந்த கட்சியாகத்தான் காணப்படுகிறது.
மத்தியில் எந்தக் கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடி யாத நிலை உருவாகும்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராவார் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 secs ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago