ஜெயலலிதா மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர் ஒட்டிய தீபா பேரவையினர்: அதிமுகவினர் கிழித்ததால் பரபரப்பு

By கி.மகாராஜன்

ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி தெரிவித்து மதுரை முழுவதும் தீபா பேரவையினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். பல இடங்களில் இந்த போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர்.

தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, டிச.5-ல் மரணம் அடைந்தார். திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ஜெய லலிதா, உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகமும், அதிமுக நிர்வாகிகளும் மீண்டும் மீண்டும் கூறிவந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைதளங்கள் மூலமாக ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பரப்பப் படுகின்றன. நடிகர்கள் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் அதிமுக உறுப்பினர் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அமர்வு, ஜெயலலிதா மரணத்தில் தனிப் பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை நானே விசாரிப்பதாக இருந்தால் ஜெயலலிதாவின் சடலத்தை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடுவேன் என்றார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர் பாக விடை தெரியாமல், அவரது நினைப்பில் இருந்துவரும் அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் சிலர் நீதிபதியின் கருத்தை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலரும், மதிமுக பொதுச் செயலர் வைகோவும் நீதிபதியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெ.தீபா அம்மா சமூக சேவை பேரவை சார்பில் மதுரை நகர் முழுவதும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டர்களை பல இடங்களில் அதிமுகவினர் கிழித்தனர்.

இது தொடர்பாக தீபா பேரவை நிறுவனர் சந்தன முருகேசன் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பல இடங்களில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் போஸ்டர்களை கிழிக்க மாட்டார்கள் என்றார்.

அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி 1987-ல் தீக்குளித்தவர் சந்தன முருகேசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்