சேலம் அன்னதானபட்டியில் காவலர் ஒருவரை கொலைச் செய்த வழக்கில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சேலம் முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானபட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் ராஜூ. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அன்னாதானபட்டியிலுள்ள மதுபான கடையின் வெளியே மது அருத்திக் கொண்டிருந்த ஆறு நபர்களை பொதுவெளியில் மது அருந்துவது தவறு என்றும் மதுகடையின் உள்ளே சென்று மது அருந்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் ராஜூவை பேச்சை கேட்காத அந்த 6 பேரும் அவரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ராஜூவின் காவலர் அடையாள அட்டை வெளியே விழுந்துள்ளது. இதனைக் கண்ட 6 பேரும் காவலரை தாக்கியது வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்று அவரை அடித்து கொலைச் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அன்னதானபட்டி போலீஸார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தியதில் செந்தில் குமார், முருகன், பாபு, வீரமணி, பன்னீர்செல்வம், பாலன், காட்டன் ராஜா ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு சேலம் முதலாவது கூடுதல் நீதிமன்றம் நீதிபதி ரவிந்திரன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிந்தரன் காவலர் ராஜு கொலைத் தொடர்பாக கைது செய்ப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago