தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உணவுக்குழாய், மலக்குழாய் சரிசெய்யப்பட்டது. 3 நாள் ஓய்வுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரையும் சில மாதங்களுக்கு முன்பு தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த் தனர். டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் இருந்த குண்டை எடுத்தனர். குண்டு பாயந்ததால், அவரது உணவுக்குழாய் மற்றும் மலக்குழாய் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, அவர் மலம் கழிக்க ஆசனவாயில் செயற்கை டியூப் வைக்கப்பட்டது.
இந்நிலையில், செயற்கை டியூப்பை அகற்றுவதற்காக பன்னா இஸ்மாயிலுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக அவரை கடந்த 13-ம் தேதி வேலூரில் இருந்து அழைத்து வந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டது. இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 5 துறைகளின் டாக்டர்கள் இணைந்து பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அறுவை சிகிச்சை செய் தனர். அவரது ஆசனவாயில் வைக்கப்பட்டிருந்த செயற்கை டியூப்பை அகற்றிவிட்டு, உணவுக் குழாய் மற்றும் மலக்குழாயை சரிசெய்தனர். அதன்பின், மேற் புறத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தோல் பகுதிகள் சரி செய்யப் பட்டது. இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், ‘‘பன்னா இஸ் மாயிலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இனிமேல் அவருக்கு மலம் கழிப்பதில் பிரச்சினை இருக்காது. 3 நாள் ஓய்வுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago