டெல்லியில் 26 நாட்களாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்: கண்டுகொள்ளாத மத்திய அரசு; கடமைக்காக போகும் கட்சிகள்

By குள.சண்முகசுந்தரம்

ஒட்டுமொத்த தமிழகத்துக்கான வாழ்வாதாரத்தை நம்மவர்கள் இன்னும் உணரவில்லை

தலைநகர் டெல்லியில் 26 நாட் களைக் கடந்து கொண்டிருக்கிறது தமிழக விவசாயிகளின் வாழ்வா, சாவா போராட்டம். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை. தமிழக கட்சிகளோ கடமைக்காக போய் ஆதரவு தெரிவித்துவிட்டு வருகின்றன.

பொதுத்துறை வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைக்க வேண்டும் என்ற 2 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச தேர்தலின் போது ’பாஜக வெற்றி பெற்றால் விவ சாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என பரப் புரை மேற்கொண்டார் பிரதமர் மோடி. அதன்படியே, அங்கு அமைந் திருக்கும் பாஜக அரசு தனது முதல் கடமையாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.

உ.பி. மாநிலத்தில்...

உ.பி. மாநிலத்தின் மொத்த விவசாயக் கடன் ரூ.62 ஆயிரம் கோடி. இதில் சிறு, குறு விவசாயிகள் 2.15 கோடி பேரின் கடன் ரூ.30,729 கோடி. 7 லட்சம் விவசாயிகளின் வராக் கடன் ரூ.5,630 கோடி. இவை இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.36,359 கோடிக்கான கடன்களை ஒரே மூச்சில் தள்ளுபடி செய்திருக்கிறது உ.பி. அரசு. இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசின் ஆதரவின்றி நிச்சயம் தள்ளுபடி செய்ய முடியாது.

விவசாய கடன் தள்ளுபடிக்காக உ.பி. அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மற்ற மாநிலங்களும் கேட்கும் என்பதால் இந்தத் தொகையை வேறு ஒரு திட்டத்தின் பெயரில் உ.பி. அரசுக்கு வழங்க திட்டமிடுகிறது மோடி அரசு.

பாஜக தேர்தல் கணக்கு

ஒருவேளை, தமிழகத்திலும் பாஜக அரசு இருந்திருந்தால் தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன்களும் இப்படி தள்ளுபடி செய்யப்பட் டிருக்கலாம். ஆனால், தமிழகத் தில் இப்போது பாஜக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் வருகிறது. அங்கே, 2013-ல் நழுவ விட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றத் துடிக்கிறது பாஜக. இப்படியொரு திட்டம் இருக்கும் போது கர்நாடகம் விரும்பாத காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும்?

இந்தக் கேள்விதான் பிரதமர் உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர் களை ஜந்தர் மந்தருக்கு வரவிடா மல் தடுக்கிறது. இது புரிந்தோ புரியாமலோ தமிழக அரசியல் கட்சிகள் ஜந்தர் மந்தருக்கு போய் ‘கடமை’க்காக ஆதரவு கொடுத்து விட்டு வந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் போராட்டம், ஒட்டு மொத்த தமிழகத்துக்கான வாழ்வா தாரப் போராட்டம் என்பதை நம்ம வர்கள் இன்னும் உணரவில்லை.

ஏன் டெல்லி போக வேண்டும்?

ஜல்லிக்கட்டுக்காக யாரும் டெல்லி சென்று போராடவில்லை. மெரினாவில் தன்னெழுச்சியாக குவிந்த இளைஞர்கள், அங்கு இருந்தபடியே அதை மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றினார் கள். தமிழகம் ஸ்தம்பிக்கும் சூழல் உருவானது.

விவசாயிகள் பிரச்சினையிலும் தமிழகத்தில் ஏன் அப்படி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட வில்லை? தமிழக ஆட்சி அதிகா ரத்தை தன் வசம் வைத்திருக்கும் டிடிவி தினகரன் ‘விவசாயிகள் பக்கம் நாங்கள் இருக்கிறோம்’ என்கிறார். உள்ளச் சுத்தியோடு அவர் இதைச் சொல்லி இருந்தால் அதிமுகவே தமிழகத்தில் விவசாயிகளுக்கான போராட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களின் ‘லகான்’ டெல்லியிடம் இருப்பதால் நிதி யமைச்சரை மட்டும் அனுப்பி ’அட்டென்டென்ஸ்’ போட்டுவிட்டு அமைதியாகி விட்டார்கள்.

எதிர்க்கட்சியான திமுக, தங்கள் கட்சியில் விவசாய அணி என்ற ஒரு பலமான அமைப்பை வைத்திருக்கிறது. அதைக் கொண்டு விவசாயிகளுக்காக சென்னையில் லட்சம் பேரைத் திரட்டி இருந்தால் தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்தே பதறி இருக்குமே. எண் ணிக்கை குறைவாக இருந்தாலும் இடதுசாரி இயக்கங்களிலும் போர்க் குணம் கொண்ட விவசாய சங்கங் கள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியினர் பலரும் பரம்பரை விவசாயிகளாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அரசியலுக் காகக்கூட களத்துக்கு வந்து மூர்க்க மாக போராடாமல் போனது ஏன்?

இத்தனைக்கும் காரணம் தமிழ கத்தில் கொள்கை அடிப்படையி லான அரசியல் அற்றுப்போய் தனி மனிதர் சார்ந்த அரசியல் ஆரா திக்கப்படுவதும், அரசியல் கலப்பில் லாமல் இருந்த விவசாயிகளுக்குள் அரசியல் ஊடுருவியதும்தான். மத்தியில் ஆளும் கட்சி இதை சரியாக புரிந்துவைத்துள்ளது. தமிழகம்தான் இன்னும் யதார்த்தம் புரியாமல் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்