தொடர் பாதுகாப்பு பணியால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற போதிய நாள் விடுப்பு வழங்கப்படாததால் பெண் போலீஸ் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். போலீஸாரின் பணிப் பளுவை குறைக்க காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப் படை, குற்றப்பிரிவு குற்றப்புல னாய்வு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 200 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 1,827 காவல் நிலையங்கள் உள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். ஆனால் அப்படி நியமிக் கப்படாததால் போலீஸ் பற்றாக் குறை உள்ளதாக போலீஸ் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப் படி 1 லட்சத்து 21 ஆயிரத்து 215 போலீஸார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 1 லட்சத்து 932 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். 20 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக இருந்தன.
காலிப் பணியிடங்களால் அதிக பணிப்பளு ஏற்படுவதாக போலீ ஸாரிடமிருந்து புகார்கள் எழுந்தன. இதை நிரூபிக்கும் வகையில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், ஜல்லிக்கட்டு போராட் டம், வார்தா புயல், கப்பல் விபத் தால் எண்ணூர் அருகே கடலில் எண் ணெய் கசிவு, ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றால் போலீஸாருக்கு தொடர் பணிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவில் பணி செய்து வந்த பெண் போலீஸ் சீதா (23) என்பவர் உடல் நலக்குறை வால் நேற்று முன்தினம் உயிர் இழந்தார்.
சிகிச்சை பெறுவதற்காக போதிய விடுப்பு அளிக்காததால் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்ததாக சக போலீஸார் குற்றம் சாட்டினர். இதுபோன்ற நிகழ்வு களைத் தடுக்க காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். போலீ ஸாருக்கு போதிய விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேவைப்படும்போது போலீஸாருக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். ஆனால், காவலர் பற்றாக் குறை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நோக்கத்தில் வேறு வழியில்லாமல் சில நேரங்களில் விடுப்பு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது” என்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி கணக்குப்படி 3 கூடுதல் டிஜிபி, 12 ஐஜி, 16 ஏஎஸ்பி, 29 டிஎஸ்பி, 119 இன்ஸ்பெக்டர், 3,637 சப்-இன்ஸ் பெக்டர் உட்பட 20 ஆயிரத்து 283 காலிப் பணியிடங்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago