சென்னை: ஐ.ஐ.டி. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - புதிய நடத்தை விதிகளை அமல்படுத்த முடிவு

By செய்திப்பிரிவு

வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரைப் பற்றி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, இது போன்ற சமயங்களில் தகுந்த ஒழுங்கு விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க ஐ.ஐ.டி. அறிவுறுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் கல்விச் சுற்றுலாவுக்காக போலாந்து நாட்டுக்குத் தன் பேராசிரியருடன் சென்றார் ஆய்வு மாணவி ஒருவர். அங்கு ஹோட்டல் அறையில் தன்னுடன் தங்குமாறு பேராசிரியர் வற்புறுத்தியதாக, கல்லூரிக்குத் திரும்பியதும் அந்த மாணவி புகார் அளித்தார். அப்புகாரை ஏற்று, விசாகா குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு பேராசிரியர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பது நிரூ பணமாகியது. அதைத் தொடர்ந்து அப்பேராசிரியருக்கு இடைநீக்க உத்தரவு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட பேராசிரியர்கள் அளவில் சந்திப்பு ஒன்று நடந்தது. அப்போது 'வகுப்பு நேரங்கள், கல்விச் சுற்றுலா, கலாச்சார விழா போன்ற தருணங்களில் மாணவர்கள் ஒழுக்க விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ‘நடத்தை விதிகள்' கொண்ட பட்டியல் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது' என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்